You are here

சாம்பியன்ஸ் லீக் வாய்ப்பை தக்கவைத்த லிவர்பூல்

லிவர்பூல்: இங்லிஷ் பிரிமியர் லீக்கிலிருந்து அடுத்த காற்பந்து பருவத்தின் சாம்பியன்ஸ் லீக் கிண்ணப் போட்டிக்குத் தகுதி பெறும் 4வது, இறுதி இடத்தைப் பிடித்தது லிவர்பூல் காற்பந்து குழு. இங்கிலீஷ் பிரிமியர் லீக்கின் இறுதி லீக் ஆட்டங்கள் நேற்று இரவு நடைபெற்றன. அவற்றில் லீக் வெற்றியாளராக மான்செஸ்டர் சிட்டி குழு ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு விட்டது. இரண்டாம் இடத்தைப் பிடித்த மான்செஸ்டர் யுனைடெட் குழுவை விட 19 புள்ளிகள் வித்தியாசத்தில் முதல் இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது.

மேலும் லீக் பட்டியலில் முதல் நான்கு இடங்களில் முடிக்கும் குழுக்கள் அடுத்த காற்பந்துப் பருவத்தின் சாம்பியன்ஸ் லீக் போட்டிக்கு நேரடியாகத் தகுதி பெறும் வாய்ப்பை பெறும். அதில் முதல் மூன்று இடங்களை சிட்டி, மான்செஸ்டர் யுனைடெட், டோட் டன்ஹம் ஹாட்ஸ்பர் குழுக்கள் பிடித்தன. எஞ்சியிருந்த நான்காம் இடத் துக்கான போட்டியில் லிவர்பூல் குழுவும் செல்சி குழுவும் இறங் கின. லிவர்பூல் பிரைட்டன் குழு வையும், செல்சி நியூகாசல் யுனைடெட் குழுவையும் எதிர் கொண்டன. ஒரு பக்கம் லிவர்பூல் 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற, செல்சி நியூகாசல் யுனைடெட் குழுவிடம் 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்ந்து பட்டி யலில் 5ஆம் இடத்தையே பிடித்தது.

தங்கக் காலணி விருது பெற்ற லிவர்பூல் காற்பந்துக் குழுவின் எகிப்து நாட்டு ஆட்டக்காரர் முகம்மது சாலா. இவர் இந்தக் காற்பந்துப் பருவத்தில் ஆக அதிகமாக லிவர்பூல் குழு சார்பில் மொத்தம் 32 கோல்களைப் புகுத்தி இந்த விருதினை வென்றுள்ளார். படம்: ஏஎஃப்பி