You are here

விஜய் தொலைக்காட்சி வசமானது ‘கடைக்குட்டி சிங்கம்’

கார்த்தி நடித்துள்ள ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் செயற்கைக்கோள் உரிமத்தை விஜய் தொலைக் காட்சி வாங்கியுள்ளது. பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் சயீஷா, ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்டப் பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் படத்தின் செயற்கைக்கோள் உரிமத்தை விஜய் தொலைக்காட்சியும் டிஜிட்டல் (மின்னணு) உரிமத்தை அமேசான் பிரைம் நிறுவனமும் வாங்கிவிட்டதாகத் தயாரிப்பு தரப்பில் அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.