You are here

முரசொலி - ஞாயிறு 20.5.2018

சிங்கப்பூரர்களிடையே உள்ள சமத்துவ
மின்மை குறித்த எந்தவொரு விவாதமும் ஒரு
முரண்பாட்டைக் கருத்தில் கொள்ள வேண்
டும்: சுதந்திரம் அடைந்தபோது சிங்கப்பூரில்
பெரும்பான்மை மக்கள் பொருளியல் நிலை
யைப் பொறுத்தவரை தாங்கள் வறுமையை
ஓரளவு சமமாகப் பங்கிட்டுக் கொண்டதாக
உணர்ந்தனர்.
அந்தநிலை உண்மையில் வரவேற்கக்
கூடியநிலை இல்லை என்பதோடு அந்த நிலை
யைச் சரிசெய்ய அரசு பொருளியல் வளர்ச்சி,
பொது வீடமைப்பு, ஓய்வுக்கால சேமிப்பு,
ஏறுமுக வரிவிதிப்பு, அதன் தொடர்ச்சியாக
பொருளியல் வளத்தை மக்களிடையே பகிர்ந்த
ளிப்பது என பல தீவிரமான கொள்கைகளைச்
செயல்படுத்தியது.
இதன் பலனாக வறுமைநிலை வெகு
விரைவாக வீழ்ச்சி கண்டது. ஆனால், உலக
மயமான பொருளியல் சூழலில் ஏற்பட்ட
வாய்ப்புகளைக் கொண்டு சிலர் மற்றவர்களைக்
காட்டிலும் கூடுதல் பலனடைந்ததால் காலப்
போக்கில் மக்களிடையே இல்லாமை உணர்வு
மீண்டும் தலைதூக்கியது.
உலகமயமாதல் உலக நாடுகளை ஒரே
பொருளியலாக ஒன்றிணைத்ததன்வழி
வளர்ச்சிக்கான சாத்தியங்களைப் பெருக்கி
யுள்ள அதேவேளையில் ஒரு நாட்டுக்குள்
நிலவக்கூடிய சமத்துவமின்மையை அதிகரித்
துள்ளது.
இந்தச் சமத்துவமின்மை பிரச்சினை
குறித்து அதிபர் உரைக்கு நன்றி தெரிவிக்கும்
தங்கள் உரையில் பல நாடாளுமன்ற உறுப்பி
னர்கள் விவாதித்தனர்.