You are here

கிடைத்த வாய்ப்பை வெற்றியாக்கும் கௌதம்

வீட்டுச் செலவுக்குப் பங்களிக்க வும் தன் செலவுகளைச் சமாளிக் கவும் 15 வயதிலிருந்து வேலை செய்துகொண்டே படித்த கௌதம் விஜயன் குமரன், 3.97 மதிப்பெண் புள்ளிகள் பெற்று (ஜிபிஏ) நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரியின் தலை சிறந்த மாணவர்களில் ஒரு வராகத் தேர்ச்சி பெற்றுள்ளார். ‘ஓ’ நிலைத் தேர்வில் அவர் பெற்ற தேர்ச்சி தொடக்கக் கல் லூரியிலோ, பலதுறைத் தொழிற் கல்லூரியில் அவர் விரும்பிய துறையிலோ சேர்வதற்குப் போதுமானதாக இல்லை. தாயாரின் அறிவுரையின்படி, நீ ஆன் பலதுறைத் தொழிற் கல்லூரியில் பொறியியல் துறையில் சேர்ந்தார் கௌதம். அக்கல்லூரியில், பொறியியல் துறை மாணவர்கள் முதல் ஆறு மாதங்கள் வெவ்வேறு துறை களின் பாடங்களுக்கு அறிமுகப் படுத்தப்படுவார்கள்.

வகுப்பறையில் மனித உடல் மாதிரியை ஆராயும் கௌதம். படம்: நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரி