You are here

மூன்று மாதங்களில் ஏடிஸ் கொசுப்பெருக்கம்

  • சுற்றுப்புற, நீர்வள அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி

டெங்கி காய்ச்சலை ஏற்படுத்தும் கொசு இனப்பெருக்கம் அதிக ரித்து இருப்பதாக தெரியவந்து உள்ளது. இதையடுத்து, டெங்கி காய்ச்சல் அச்சம் மீண்டும் தலைதூக்கி உள்ளது. டெங்கி காய்ச்சலை ஏற்படுத் தும் ஏடிஸ் என்ற ஒரு வகை கொசுக்களின் இனப்பெருக்கம் அதிகரித்து இருப்பது, தேசிய சுற்றுப்புற வாரியத்தின் சோத னைகள் மூலம் தெரியவந்து உள்ளது.

சென்ற ஆண்டின் நான்கா வது காலாண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் டெங்கி கொசுக்களின் இனப்பெருக்கம் 22% அதிகரித்து இருப்பது வாரியத்தின் சோதனைகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுற்றுப்புற, நீர்வள அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி நேற்று தெரிவித்தார். தேசிய சுற்றுப்புற வாரியம் ஒரு வகை சாதனத்தின் உதவியுடன் கொசுக்களைக் கண் காணித்து வருகிறது. பல குடியிருப்புக் கட்டடங்களிலும் அத்தகைய சாதனங்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன.