You are here

நஜிப்: பாதுகாப்பு கேட்கவில்லை

மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், 1எம்டிபி விசாரணை தொடர்பில் சாட்சிப் பாதுகாப்பைத் தாம் நாடவில்லை என்று தெரி வித்துள்ளார். பெக்கான் தொகுதி நாடாளு மன்ற உறுப்பினரான நஜிப், நேற்று தமது தொகுதிக்குச் சென்றார். அங்கு செய்தியாளர்களிடம் பேசிய நஜிப், சாட்சிப் பாதுகாப்பைத் தான் கேட்டிருப்பதாக வெளியான செய் தியை மறுத்தார். 1எம்டிபி அரசாங்க நிதியுடன் நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடர்புடையவர்கள் தமக்கும் தம் குடும்ப உறுப்பினர்களுக்கும் கொலை மிரட்டல் விடுத்திருப்ப தாகக் கூறி, அதனால் தமக்கு சாட்சிப் பாதுகாப்பு வேண்டுமென்று நஜிப் கேட்டுக்கொண்டு இருப்ப தாக மலாய் மெயில் இணையப் பதிப்பு தெரிவித்தது. அத்தகைய மிரட்டல்கள் மலே சியாவிலிருந்து மட்டுமின்றி வெளி நாடுகளிலிருந்தும் வந்துள்ளதாக வும் அவை 1எம்டிபி நிதியுடன் தொடர்புடையவை என்றும் நஜிப் தெரிவித்ததாக அது கூறியது.

அம்னோ முன்னாள் தலைவர் நஜிப் ரசாக், கோலாலம்பூரில் இருக்கும் தமது வீட்டில் நேற்று உடல்நலனைப் பரிசோதித்துக்கொண்டார். ரத்த அழுத்த பரிசோதனை படம் டுவிட்டர் பக்கத்தில் இடம்பெற்றிருந்தது. ‘உடல்நலப் பரிசோதனையை சனிக்கிழமை இரவு செய்துகொண்டேன். எல்லாம் வழக்கம்போல் இருக்கிறது’ என்று நஜிப் குறிப்பிட்டுள்ளார். படம்: நஜிப் ரசாக்/டுவிட்டர்