You are here

ஐவருக்கு மேல் ஒன்றுகூட தாய்லாந்து ராணுவ அரசு தடை

பேங்காக்: பேங்காக் அரசாங்கக் கட்டடம், அதனைச் சுற்றியுள்ள சாலைகளில் ஐவருக்கு மேல் ஒன்றுகூடுவதற்கு அந்நாட்டின் ராணுவ அரசாங்கம் தடை விதித் துள்ளது. 2014 மே 22ஆம் தேதியன்று ஆட்சியைக் கைப் பற்றிய ராணுவத்திற்கு எதிராக இன்று ஆர்ப்பாட்டங்களை நடத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருந்த வேளையில் இந்தத் தடை அமலுக்கு வந்துள்ளது. ராணுவத்தின் தடையை மீறி ஒன்றுகூட வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே பேங்காக் தம்மாசட் பல்கலைக்கழகத்தி லிருந்து தொடங்கவிருக்கும் பேரணியைச் சமாளிக்க முன் கூட்டியே 3,000க்கும் மேற்பட்ட போலிசார் குவிக்கப்பட்டுள்ளனர். தேசிய அமைதி, ஒழுங்குக்கான மன்றம் என்று தம்மை அறிவித்துக் கொள்ளும் ராணுவம் தேர்தலை நடத்தாமல் பலமுறை ஒத்தி வைத்துவந்துள்ளது. 2014ல் பல மாதங்களாக நீடித்த ஆர்ப்பாட்டங்களுக்கு இடையே பதற்றமான அரசியல் சூழ்நிலையில் ராணுவம் ஆட்சி யைக் கையில் எடுத்தது. அன்று முதல் இன்று வரை பொதுத்தேர்தலை நடத்தாமல் அது பலமுறை ஒத்திவைத்தது.

இருப்பினும் பிப்ரவரி மாதம் தேர்தல் நடத்தப்படும் என்று ராணுவ அரசு உறுதி தெரிவித் துள்ளது. ஆனால் ராணுவத்தின் பேச்சை எதிர்க்கட்சிகள் நம்புவதாக இல்லை. இந்த நிலையில் ஆர்ப் பாட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன. இதனால் அரசாங்கக் கட்டடம், முக்கிய சாலைகள் குறிப்பிட்ட இடங்களில் ஐவருக்கு மேல் கூட அனுமதியில்லை என்று தாய்லாந்து போலிசார் கூறினர்.