You are here

மகாதீர்: அதிவேக ரயில் பற்றி விரைவில் முடிவு

சிங்கப்பூர்-கோலாலம்பூர் அதி வேக ரயில் போன்ற பெருந்திட்டங் கள் தொடர்பில் விரைவில் ஒரு முடிவு எடுக்கப்படும் என்று மலேசிய பிரதமர் டாக்டர் மகாதீர் முகம்மது நேற்று அறிவித்தார். டாக்டர் மகாதீர், நேற்று தனது முதலாவது வாராந்திர அமைச் சரவைக் கூட்டத்தை நடத்தினார். அதற்குப் பிறகு அவர் செய்தி யாளர்களிடம் பேசினார். சிங்கப்பூருக்கும் மலேசியாவுக் கும் இடையில் 560 கி.மீ. ரயில் இணைப்பை ஏற்படுத்துவதற்கான உடன்பாடு 2016ல் கையெழுத் திடப்பட்டது. அப்போது நஜிப் ரசாக் மலேசியாவின் பிரதமராக இருந்தார்.

அண்மையில் மலேசியாவில் நடந்துமுடிந்த பொதுத் தேர்தலில் டாக்டர் மகாதீர் தலைமையிலான கூட்டணி வெற்றிபெற்றது. பிரதமர் பொறுப்பை டாக்டர் மகாதீர் ஏற்றார். அதிவேக ரயில் திட்டம் மறுபரிசீலனை செய்யப் படும் என்று மலேசியாவின் புதிய பிரதமர் அறிவித்து இருக்கிறார். சிங்கப்பூர்=கோலாலம்பூர் அதி வேக ரயில் உடன்பாட்டிற்கான பேச்சுவார்த்தைக்கு நிலப் பொது போக்குவரத்து ஆணையம் என்ற அமைப்பு தலைமை தாங்கியது.

மலேசிய பிரதமர் டாக்டர் மகாதீர் முகம்மது (வலமிருந்து மூன்றாவது) தன்னுடைய முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தை நேற்று கோலாலம்பூர் பெர்டானா புத்ராவில் தலைமை தாங்கி நடத்தினார். (இடமிருந்து) கல்வி அமைச்சர் டாக்டர் மஸ்லி மாலிக், நிதி அமைச்சர் லிம் குவான் எங், டாக்டர் வான் அசிசா, உள்துறை அமைச்சர் முஹைதீன் யாசின், தற்காப்பு அமைச்சர் முகம்மது சாபு ஆகியோர் உடனிருக்கிறார்கள். படம்: தி ஸ்டார்/ஆசியா நியூஸ் நெட்வொர்க்