You are here

‘திருமண வாழ்க்கை அற்புதம்’

  • நமீதா

தனது திருமண வாழ்க்கை எதிர்பார்த்ததை விடவும் மிகவும் மகிழ்ச்சிகரமாக அமைந் துள்ளதாகக் கூறியுள்ளார் நடிகை நமீதா. காதல் திருமணத்திற்குப் பின் இவரை எந்தப் படத்திலும் பார்க்க முடியவில்லை. கிட்டத்தட்ட ஓராண்டாக படங்களில் நடிக்காமல் குடும்ப வாழ்க்கையில் மட் டுமே முனைப்பாக உள்ளாராம். “அதற்காக நடிப்பை விட்டு ஒதுங்கி விட்டதாகக் கருதவேண்டாம். தற்போ தைக்குக் குடும்ப விவகாரங்களில் கவ னம் செலுத்தி வருகிறேன். “அப்படியே படங்க ளில் நடிப்பதற்கும் சில கதை களைக் கேட்டு வருகிறேன்” என்கிறார் நமீதா.

இதற்கி டை யே த ன து க ண வ ரை யும் நடிக ராக மாற்ற முடிவு செய் துள்ளாராம். “கணவர் வீராவுக் காகவும் சில கதைக ளைக் கேட்டு வருகிறேன். “என் கணவர் கதா நாயகனாக நடிக்கும் படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளி யாகும். அதற்கான நேரம் அமையவேண் டும். எனவே பொறு மையுடன் காத்திருக் கிறோம்.” “நான் நடிக்கும் படங்கள் குறித்து இப் போது ஏதும் அறிவிக்க இயலாது. சில படங்க ளில் நடிப்பது குறித்துப் பேச்சுவார்த்தை நடந்து கொண்டு இருக்கிறது. அனைத்தும் உறுதியானதும் உரிய அறி விப்புகள் வெளிவரும். “புதுப்படம் ஒன்றில் சக்தி வாய்ந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். எனவே மீண்டும் என்னைத் திரையில் பார்க்கலாம்,” என்கிறார் நமீதா.