You are here

கல்வி - சமூக ஏற்றநிலையை அடைவதற்கான வழி

இந்திராணி ராஜா

தொடர் முன்னேற்றத்தை நாடிச் செல்லும் உணர்வே சிங்கப்பூரின் சிறப்பம்சம். சூழ்நிலைகளும் பின்னணி யும் ஒரு பொருட்டாகக் கருதப்படாத, நம்மில் ஒவ்வொருவரும் சமமான வாய்ப்புகளைப் பெற்று, அர்த்தம் உள்ள வாழ்க்கை வாழக்கூடிய மேம்பட்ட எதிர்காலத்தை நிர்மாணிக்க நாம் முயற்சி எடுக்கிறோம்.

அண்மையில் நாடாளுமன்றத்தில் அதிபர் ஆற்றிய உரையில், சமூக ஏற்ற நிலை, மையக் கருப்பொருளாக இடம் பெற்றது.

வசதி வாய்ப்பற்ற நிலைகளில் இருப்பவர்கள் சமுதாயத்தில் முன்னேற் றமடைந்து, மேம்பட்ட வாழ்க்கை வாழ எவ்வாறு உதவுவது என்பது இதன் சாரம்.

சமூக ஏற்றநிலை பற்றி நாடாளு மன்றத்தில் விரிவாகப் பேசிய அமைச்சர்கள், மக்களுக்காக வாய்ப்பு களை உருவாக்கிக் கொடுப்பதிலும் சமுதாய முன்னேற்றத்திற்கு வழிகோலு வதிலும் அரசாங்கம் கொண்டுள்ள கடப்பாட்டை மறுஉறுதிப்படுத்தினார்கள்.

மேலும்