You are here

சிங்கப்பூரில் வரலாற்று சிறப்புமிக்க அமெரிக்கா-வடகொரியா உச்சநிலைச் சந்திப்பு

சிங்கப்பூரில் இம்மாதம் 12ஆம் தேதி நடைபெறவிருக்கும் அமெ ரிக்கா-வடகொரியா உச்சநிலைச் சந்திப்பு, இரு தரப்புகளின் வலு வான நம்பிக்கையை அது பெற்றுள் ளது என்பதைக் காட்டுகிறது என்று வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் தெரி வித்துள்ளார். சிங்கப்பூர் ஒரு நேர்மையான, நடுநிலையான உபசரிப்பாளர் என் பதில் இரு நாடுகளும் அதிக நம்பிக்கை வைத்திருப்பது எங்க ளுக்கு மிகுந்த உற்சாகமளிக் கிறது என்று டாக்டர் விவியன் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரி வித்தார்.

அமெரிக்காவுக்கு ஒருநாள் பணிநிமித்த பயணம் மேற்கொண்ட அமைச்சர் விவியன், வா‌ஷிங்ட னில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பொம்பியோவை யும் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டனையும் சந்தித்துப் பேசினார்.

வா‌ஷிங்டனுக்கு ஒரு நாள் பணிநிமித்த பயணம் மேற்கொண்ட சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பால கிருஷ்ணனை (இடது) வர வேற்கிறார் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பொம் பியோ. படம்: விவியன் பாலகிருஷ்ணன் ஃபேஸ்புக்

மேலும் செய்திகள்