You are here

காற்பந்து: கோஸ்டா ரிக்காவை தோற்கடித்தது இங்கிலாந்து

  • படம்: ராய்ட்டர்ஸ்

லீட்ஸ்: ரஷ்யாவில் உலகக் கிண்ண காற்பந்துப் போட்டி தொடங்குவதற்கு இன்னும் ஐந்து நாட்களே உள்ள நிலையில் அந்தப் போட்டிக்கு கம்பீரத்துடன் செல் கிறது இங்கிலாந்து அணி. சிங்கப்பூர் நேரப்படி நேற்று அதிகாலை நடைபெற்ற அனைத் துலக நட்புமுறை ஆட்டம் ஒன்றில், கோஸ்டா ரிக்காவை 2=0 எனும் கோல் கணக்கில் தோற்கடித்தது இங்கிலாந்து. இந்த ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட் ஆட்டக்காரர் மார்கஸ் ரேஷ்ஃபர்ட் பிரகாசித்தார். ஆட்டம் தொடங்கி 13வது நிமிடத்தில் அவர் அபாரமாக கோல் அடித்தார். 25 மீட்டர் தூரத்திலிருந்து அவர் பலமாக உதைத்த பந்து, கோல் கம்பத்தின் வலது மேல் பகுதிக்குள் புகுந்து கோலானது.

பின்னர் ஆட்டத்தின் 76வது நிமிடத்தில் டேனி வெல்பெக் இங்கிலாந்தின் இரண்டாவது கோலை அடித்து அணிக்கு வலு வான முன்னிலையைத் தந்தார். இந்நிலையில், உலகக் கிண்ண போட்டியில் இங்கிலாந்து அணி யின் சார்பாக களமிறக்கப்படும் 11 ஆட்டக்காரர்களில் ஒருவராக ரேஷ்ஃபர்ட்டை தேர்வுசெய்வது குறித்து தாம் முடிவெடுக்க வேண்டியிருப்பதாக அணியின் பயிற்றுவிப்பாளர் கேரத் சவுத்கேட் தெரிவித்தார்.

கோஸ்டா ரிக்கா அணி உடனான ஆட்டத்தில் இங்கிலாந்தின் முதல் கோலை அடித்த பின், அணியினருடன் கொண்டாடும் மார்கஸ் ரேஷ்ஃபர்ட். படம்: ராய்ட்டர்ஸ்