You are here

குமரியில் வெள்ளத்தில் சிக்கியவர்கள் படகு மூலம் மீட்பு; சூறைக்காற்றுக்கு இருவர் பலி

குமரி: கனமழை காரணமாகக் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற் பட்டுள்ள நிலையில் குமரி மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளத் தில் சிக்கியவர்களை மீட்புக் குழுவினர் படகுகள் மூலம் மீட்டு வருகிறார்கள். தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை தற்போது தீவிரமடைந் துள்ளது. குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள குமரி மாவட்டத்தில் கடந்த 5 நாட்களாக கனமழை நீடித்து வருகிறது. இதையடுத்து தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள் ளன. வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் மக்கள் வெளியேறி உறவினர்கள், நண்பர்களின் வீடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

தற்போது கர்நாடகாவிலும் மழை வெளுத்துக் கட்டுவதால், காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. காவிரி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்குத் தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. பெரும்பாலான மக்கள் கரையோரப் பகுதிகளில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டிருப்பதாகக் குமரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இடைவிடாத மழையுடன் பலத்த காற்றும் வீசி வருவதால் குமரியில் ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. இத னால் பல பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மின் கம்பங்கள் சரிந்ததால் பல இடங்களில் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் சூழ்ந்த கிராமங்கள் இருளில் மூழ்கியுள்ளன.

படகுகள் மூலம் மீட்கப்பட்ட மக்கள். (கோப்புப் படம்)