You are here

சிங்கப்பூரின் முக்கிய இடங்களில் உச்சக்கட்ட பாதுகாப்பு

  • செந்தோசாவின் கெப்பெலா ஹோட்டலின் நுழைவாயில்

அமெரிக்கா-வடகொரியா உச்ச நிலை சந்திப்பு நடைபெறும் கெப் பெலா ஹோட்டலில் நேற்று உச்சக்கட்ட பாதுகாப்பு மேலும் வலுவாக்கப்பட்டது. அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன்னும் இன்று காலை 9 மணிக்கு அங்கு சந்திக்க உள்ளதை அடுத்து விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை சிங்கப்பூர் செய்துள்ளது. செந்தோசாவினுள் செல்லும் அனைத்து வாகனங்களும் கடுமை யான சோதனைக்கு உட்படுத்தப்பட வில்லை என்றாலும் கெப்பெலா ஹோட்டலுக்குள் செல்லும் வழி யில் போலிசார் கூடாரம் அமைத்து நுழையும் வாகனங்களை சோதித்துக்கொண்டிருந்தனர்.

ஹார்பர்ஃபிரண்ட் பகுதியி லிருந்து செந்தோசாவினுள் நுழையும் சாலையில் பெரிய அள விலான கூடாரம் அமைக்கப்பட் டிருந்தது. ஆனால் நேற்று காலை வரையில் அங்கு சோதனைகள் நடத்தப்படவோ போலிசார் நிறுத்தப் படவோ இல்லை. செந்தோசா தீவின் மற்ற பல பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பலவான் கடற்கரையில் ராணு வம் நிறுத்தப்பட்டிருந்தது. அதன் அருகில் உள்ள பலவான் கிட்ஸ் சிட்டியின் மேல் தளத்தில் உள் துறைக் குழுவின் தளபத்திய சாவடி அமைக்கப்பட்டிருந்தது. எதிரில் உள்ள கடற்பகுதியில் கடற்படை கப்பலும் காணப்பட்டது. இருப்பினும் செந்தோசாவில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட வில்லை.

செந்தோசாவின் கெப்பெலா ஹோட்டலின் நுழைவாயிலில் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மேலும் செய்திகள்

2018-06-12 06:10:00 +0800