You are here

அணுவாயுதத்தைக் கைவிட கிம் உறுதி

அணுவாயுதக் களைவுக்கு தனது உறுதியான கடப்பாட்டை வட கொரியத் தலைவர் கிம் ஜோங் உன் தந்திருப்பதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரி வித்துள்ளார். இரு தலைவர்களுக்கும் இடையே சிங்கப்பூரில் நடந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உச்சநிலைச் சந்திப்பைத் தொடர்ந்து, அமெரிக்காவும் வட கொரி யாவும் இரு நாட்டு உறவு களில் புதிய அத்தியாயத்தை எழுதத் தாங்கள் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளன.

இருநாடுகளுக்கும் இடையே கூட்டறிக்கை கையெழுத்தான பின்னர், மாலை 4.05 மணி அளவில் அதிபர் டிரம்ப் செய்தி யாளர் களிடம் பேசினார். வடகொரியா எதிர்ப்புத் தெரி விக்கும் அமெரிக்காவும் தென் கொரி யா வும் இணைந்து ஆண்டு தோறும் நடத்தும் ராணுவப் பயிற்சி களை நிறுத்த அமெரிக்க ஒப்புக் கொண்டுள்ளதாக அதிபர் டிரம்ப் கூறினார். எனினும், அணுவாயுதக் களைவு முற்றாக ஏற்படும் வரை வட கொரியா மீதான தடைகள் நீடிக் கும் என்ற அதிபர் டிரம்ப், அதற்கு நீண்ட காலம் ஆகலாம் என்றார்.

வடகொரிய நாட்டு விவகாரங் களுக்கான ஆணையத்தின் தலைவராக விளங்கும் கிம் ஜோங் உன், தமது நாட்டின் முக்கிய ஏவுகணை இயந்திரப் பரிசோதனை தளத்தை அழிக்கவும் ஒப்புக் கொண்டதாக கெப்பெலா ஹோட்ட லில் நடந்த செய்தியாளர் கூட்டத் தில் திரு டிரம்ப் தெரிவித்தார். இது கடைசிநேர முடிவு. கூட்டறிக்கையில் இது இடம்பெற வில்லை என்பதைக் குறிப்பிட்ட திரு டிரம்ப், “உடன்பாடு கையெழுத் தான பின்னர் இதுகுறித்து கையெழுத்திட்டோம்.

“தலைவர் கிம் வேறு எந்தத் தலைவருக்கும் இல்லாத வாய்ப்பாக தமது நாட்டுக்கு புதிய, வளமான, புகழ்மிக்க வாழ்க்கையைத் தமது மக்களுக்கு அளிக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார். கொரிய தீபகற்பத் தில் முழு அளவிலான அணு வாயுதக் களைவுக்கு தனது உறுதி யான கடப்பாட்டை திரு கிம் மறுஉறுதி செய்தார்,” என்று கூறினார் திரு டிரம்ப். “இரு நாடுகளுக்கிடையே புதிய வரலாற்றையும், புதிய அத்தி யாயம் ஒன்றையும் தொடங்க நாங்கள் தயாராக உள்ளோம்,” என்றார் அதிபர் டிரம்ப்.

உச்சநிலை சந்திப்பையொட்டி “கடந்த 25 மணி நேரமாக நான் தூங்கவில்லை” என்று கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப், கெப்பெலா ஹோட்டலில் நேற்று நடந்த ஒரு மணி நேர செய்தியாளர் கூட்டத்தில் பல கேள்விகளுக்கும் உற்சாகமாகவும் தயக்கமின்றியும் சில வேளை களில் வேடிக்கையாகவும் சில நேரங்களில் கடுமையாகவும் பதிலளித்தார். படம்: ஏஎஃப்பி

முழுமையான செய்தி படிக்க