‘மற்ற சமூகங்கள் மீதான அக்கறை பிணைப்பை வளர்க்கும்’

சிங்கப்பூரில் சீன கலாசாரம் எவ் வாறு மற்ற கலாசாரங்களால் பரி ணாமமடைந்து, செதுக்கப்பட்டுள் ளது என்பதை எடுத்துக்காட்டும் சிங்கப்பூர் சீன கலாசார மையத்தில் நடைபெறவுள்ள ஒரு கண்காட்சி, சிங்கப்பூரின் சமூகப் பிணைப்பை வலுவாக்கும் ஒன்று என அதிபர் ஹலிமா யாக்கோப் தெரிவித்துள் ளார்.
சீனப் புத்தாண்டைக் கொண் டாட சிங்கப்பூர் சீன குலவழிச் சங்கங்களின் கூட்டமைப்பு, சிங் கப்பூர் சீன கலாசார மையம் ஆகி யவை நேற்று இணைந்து ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அதிபர் இதனைத் தெரிவித்தார்.
மற்ற சமூகங்கள் மீதான அக் கறையை வெளிப்படுத்த வேண்டி யதன் அவசியத்தை எடுத்துரைத்த அவர், அதற்கு சில உதாரணங் களைச் சுட்டினார்.
உதாரணத்திற்கு, உள்ளூர் மலாய் 'அக்கபெல்லா' இசைக்குழு ஒன்று, கடந்த ஆண்டு சீன கலா சார மையத்தில் நடைபெற்ற கலை விழாவில் சீனப் பாடல்களைப் பாடியது. சிங்கப்பூர் சீன கலா சாரத்தை மக்களுடன் எளிதாகத் தொடர்புபடுத்தி, அவர்களைச் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் படைக்கப்பட்ட நிகழ்ச்சி அது.
மையத்தின் இந்த ஆண்டு கலைநிகழ்ச்சியில், உள்ளூர் இசைக்குழுவான சியோங் லெங் இசை சங்கம், மலாய், பெரனாக் கான் கூறுகளை தங்களது இசை யில் சேர்த்துக்கொள்ளும்.
"பல்வேறுபட்ட சமூகங்களுக் கிடையே, நல்ல புரிந்துணர்வை வளர்ப்பதற்கும் நமக்கிடையே பல ஒற்றுமைகள் உள்ளன என்பதை நினைவூட்டவும், நமது கலாசா ரத்தை வெளிப்படுத்தும் இத்த கைய புத்தாக்க முயற்சிகள் முக்கியம். பல கலாசார சமூகத்தை ஒன்றிணைக்கும் சமூகப் பசையாக வும் இது செயல்படுகிறது," என்று கூறினார் அதிபர்.
குடியேறிகள் பழகிக்கொள்ள வேண்டிய முக்கிய அங்கம் இது என்பதையும் அவர் சுட்டினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!