மின்னிலக்கப் பொருளியலை மேம்படுத்த வாய்ப்புகள்

மின்னிலக்கப் பொருளியல் வாய்ப்புகளை ஊழியர்களும் வர்த்தகங்களும் பயன்படுத்திக் கொள்ள ஏதுவாக அதற்கான ஆதரவையும் உள்கட்டமைப்பை யும் அமைத்துத் தர அரசாங்கம் கடப்பாடு கொண்டிருப்பதாக தொடர்பு, தகவல் அமைச்சர் எஸ். ஈஸ்வரன் கூறி உள்ளார்.
சிங்கப்பூரின் செயற்கை நுண்ணறிவுத்திறன்களை விரிவு படுத்தும் நோக்கிலான $150 மில்லியன் தேசியத் திட்டமான 'ஏஐ சிங்கப்பூர்', 23 தொழில் துறை உருமாற்ற வரைபடங்கள் போன்ற தேசிய திட்டங்கள் நிறுவனங்களின் திட்டங்களுடன் இணைந்தவையாக இருக்க வேண்டும் என்றார் அவர்.
சிங்கப்பூரில் கூகல் நிறுவனத் தின் Developer Space @ Google எனும் புதிய பிரிவைத் தொடங்கி வைத்தபோது பேசிய திரு ஈஸ்வரன், "இந்த தேசிய திட்டங்கள், தொழில்துறை முயற் சிகள் அனைவருக்கும் வெற்றி கரமான சூழலை உருவாக்குவதே எங்களது இலக்கு," என்றார்.

"தொழில்நுட்பமும் மின்னிலக் கமயமும் அனைவருக்கும் வள மான வாய்ப்புகளை சாத்தியமாக் கியுள்ளன. புதிய மின்னியல் தீர்வுகள், அரசாங்கத்தின் கூட்டு முயற்சிகள், தொழில்துறைகள், பங்காளித்துவம் ஆகியவை நமது வர்த்தகங்களை மிகுந்த போட்டித்தன்மையுடனும் புத்தாக் கத்துடனும் வைத்திருக்கும்," என நம்புவதாக அமைச்சர் ஈஸ்வரன் குறிப்பிட்டார்.
பாசிர் பாஞ்சாங்கின் 'மேப்பல்ட்ரீ பிசினஸ் சிட்டி'யில் 2,700 சதுரஅடி பரப்பளவில் அமைந்துள்ள கூகலின் புதிய பிரிவு இங்கு மென்பொருளாளர் களுக்கு பயிற்சிகளை வழங்கும் என்று கூறப்பட்டது.
கடந்த 19ம் தேதி முதல் நேற்று வரை இயந்திரக் கற்றல் தொழில்நுட்பம் தொடர்பில் பயிற்சி வகுப்பு ஒன்றை அது நடத்தியது.
புதிய தொழில்நுட்பங்கள், தொழில்நுட்பங்களின் போக்கு ஆகியவற்றில் உள்ளூர் மென் பொருளாளர்களின் திறன்களை மேம்படுத்தும் நோக்கில் ஆண்டு தோறும் 'கூகல் டெவலப்பர் ஃபெஸ்டிவல்' போன்ற நிகழ்ச்சி களையும் கூகலின் புதிய பிரிவு நடத்தும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!