தவில் முழங்கும் தைப்பூச பக்தியில் கட்டொழுங்கும் மிளிரட்டும்

பல சமயத்தவர் வாழ்கின்ற சிங்கப்பூரில் இந்துக்கள் குறிப்பாக தமிழர்கள், காவடி, அலகுக் காவடி, பால்குடம் சுமந்து முருகப் பெருமானுக்குக் காணிக்கை செலுத்தும் விழா, பல்லாண்டு காலமாக ஆண்டுதோறும் தடைபடாமல் நடந்து வருகிறது.

டேங் ரோட்டில் அருள்மிகு தெண்டாயுத பாணி கோயில் 1859ல் எழுப்பப்பட்டது முதலே தைப்பூசக் காவடிக் காணிக்கை ஊர்வலம் இங்கு வேர் ஊன்றிவிட்டது.

தைப்பூச ஊர்வலம், ஆண்டுதோறும் தை மாதம், பூசம் நட்சத்திரம், பௌர்ணமி நாளில் இடம்பெற்று, நாட்டு வரலாற்றுடன் பின்னிப் பிணைந்த ஒன்றாக, பல இன உள்ளூர் மக்களை மட்டுமின்றி, உலக மக்களையும் கவர்ந்து ஈர்க்கும் வகையில், இந்துத் தமிழர்களின் மிகமுக்கிய சமய விழாவாக 1930கள் முதல் இங்கு பரிணமித்து வந்துள்ளது.

தமிழ்க் கடவுள் என்று குறிப்பிடப்படும் முருகப் பெருமானுக்கு விரதம் இருந்து காவடி எடுத்து, பால்குடம் சுமந்து நடந்து செல்லும் பக்தர்களைக் காவடிச் சுமையும் களைப்பும் பாதிக்காத வகையில், அவர்களின் ஒருமித்த கவனமும் கடவுள் மீது நிலைக்கும் வகையில், பக்திப் பாடல்களும் இசையும் காவடி ஆட்டமும் ஊர்வலத்தில் காலாகால மாக இடம்பெற்று வந்தன.

சிங்கப்பூரில் சிராங்கூன் ரோட்டில் இருக் கும் ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் இருந்து சுமார் 3.5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அருள்மிகு தெண்டாயுதபாணி கோயில் வரை நகர்ப்பகுதி வழியாக காவடி சுமந்து பக்தர்கள் நடந்து செல்வது வழக்கம்.

போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல், அன்றாட பணிகள் பாதிக்கப்படாமல், பக்தர் களின் மனமும் கோணாமல் மிகுந்த கவனத் துடன் இந்து அறக்கட்டளை வாரியத்தினர், தைப்பூசத் திருவிழா ஏற்பாட்டுக் குழுவினர், போலிசார், இதர அமைப்புகளின் பிரதிநிதி கள், தொண்டூழியர்கள் ஆகியோர் செயல் பட்டு வருகின்றனர்.

அவர்களின் உதவியுடன் வெகு சிறப்பாக ஊர்வல ஏற்பாடுகள் செய்யப்பட்டு இசைக் கருவிகள், பக்தி ஒலியுடன் கூடிய தைப்பூசக் காவடி ஊர்வலம் ஆண்டுதோறும் இடம்பெற்று வருகின்றன. இருந்தாலும், ஊர்வலத்தில் வந்த பக்தர் களுக்கு இடையே கைகலப்புகள் ஏற்பட்டதை அடுத்து 1973ஆம் ஆண்டு முதல் இசைக் கருவிகள், ஒலிபெருக்கிகள் உள்ளிட்ட எல்லா வகை இசையும் தடைசெய்யப்பட்டன.

அதனை அடுத்து, இசைக் கருவிகளும் இசை ஒலியும் இல்லாமல் நடந்துவந்த தைப் பூச ஊர்வலம், சமய வழக்கம் முற்றிலும் இடம்பெறாததாக, பக்தர்களிடம் ஊக்கமும் நாட்டமும் குறைந்து அவர்களில் பலரும் வேண்டுதல்களை மனநிறைவுடன் நிறை வேற்ற மலேசியா செல்லும் ஒரு நிலை ஏற் பட்டது. அதேவேளையில், தங்கள் பக்திப் பசியைத் தணிக்கும் வகையில் வழக்கங்களுடன் கூடிய தைப்பூச ஊர்வலம் வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்தபடியே இருந் தனர். இவற்றை எல்லாம் இந்து அறக்கட் டளை வாரியம் உள்ளிட்ட அமைப்புகள் மூலம் செவி மடுத்த அரசாங்கம், 2012ஆம் ஆண்டு முதல் விதிகளைப் படிப்படியாகத் தளர்த்தத் தொடங்கியது.

மேலும் குறிப்பிடும்படியாக, இந்த ஆண்டில் தவில், டோல் போன்ற இசைக் கருவிகளுக்கும் அனுமதி கிடைத்துள்ளது. சென்ற ஆண்டை விட 12 இடங்கள் கூடுதலாக மொத்தம் 35 இடங்களில் பக்தி இசை, நாளை (ஜனவரி 21) காலை 7 மணி முதல் இரவு 10.30 வரை ஒலிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

மொத்தத்தில், சிங்கப்பூரில் பல ஆண்டு களுக்குப் பிறகு தைப்பூச ஊர்வலம் மீண்டும் பக்தர்களின் விருப்பத்தைப் பெரிதும் நிறை வேற்றக்கூடிய ஒரு விழாவாக நாளை நடக்க இருக்கிறது. தவில் போன்ற இசைக்கருவி யைப் பயன்படுத்த விரும்பும் பக்தர்கள் முன்னரே பதிந்திருக்கவேண்டும்.

தைப்பூசத்தில் பக்தி இசை, காவடி ஆட்டத் துடன் கூடிய காணிக்கையை முருகக் கடவு ளுக்குச் செலுத்துவது இந்துத் தமிழர்களின் மிக முக்கியமான சமய வழக்கம் என்பதை மறுப்பதற்கில்லை. நிலப் பற்றாக்குறை இருந்தாலும் நகரமய நாடாக இருந்தாலும் மக்கள், அவர்கள் சிறுபான்மையினராக இருந்தாலும் எல்லாரது சமயப் பாரம்பரியத்தைக் கட்டிக்காத்து பக்தர் களின் விருப்பங்களை நிறைவேற்ற முழுமூச்சாக முயலும் சிங்கப்பூரின் இந்த முயற்சி முழு வெற்றிபெற மக்களின் ஒத்துழைப்பும் உதவியும் புரிந்துணர்வும் மிகவும் முக்கியம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!