‘வாண்டு’ 

இயக்குநர் செல்வராகவனின் உதவியாளர் வாசன் ஷாஜி இயக்குநராக அவதாரம் எடுத்தி ருக்கும் படம் 'வாண்டு'.
சீனு, ஆல்வின், எஸ்.ஆர். குணா, ‌ஷிகா, சாய் தீனா, மகா காந்தி, 'மெட்ராஸ்' ரமா, வின்னர் ராமச்சந்திரன், ரவிஷங்கர் ஆகி யோர் நடித்துள்ளார்கள்.
"விட்டுக்கொடுத்தவர்கள் கெட்டதில்லை எனப் பெரியோர் கள் சொல்வார்கள்.
"அதை இந்தப் படத்தில் அழுத்தமாக சொல்லியுள்ளேன்," என்கிறார் ஷாஜி.
''இது 1971ல் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படை யாகக் கொண்ட படமாக இருந் தாலும் தற்கால இளைய தலை முறைக்கு ஏற்றவாறு தற்காலத்தில் நடக்கும் கதையாகவே இருக்கும். சூதாட்டத்தில் ஜெயித்தவனுக்கும் தோற்றவனுக்கும் இடையே நடக் கும் நீயா? நானா? போராட்டத்தை விறுவிறுப்பாக திரைக்கதையில் சொல்லியுள்ளேன்.
"வடசென்னை குப்பத்து மக்க ளின் இயல்பான வாழ்க்கை, அவர்களது வீரம், அன்பு, சண்டை, பிரச்சினை என அனைத்தையும் எந்த அரிதாரமும் இல்லாமல் இயல்பாகப் பதிவு செய்திருக் கிறேன்.
"அதேநேரத்தில் ஒரு சினிமா வாக எந்த இடத்திலும் போரடிக் காமல் விறுவிறு திரைக்கதை யுடன் பரபரப்பான படமாகவும் இருக்கும்," என்கிறார் இயக்குநர்.
"தயாரிப்பாளரும் விநியோகஸ் தருமான விஜயகுமார் கூறுகை யில், இது அனைவருக்குமான படம் என்றார்.
"எனக்கு சினிமா ஆர்வம் அதிகம். 'கில்லி' உட்பட பல படங்களை விநியோகம் செய்துள் ளேன். தற்போது 'அவசரப்படா தீங்க' என்ற படத்தை தயாரித்து நாயகனாக நடித்து வருகிறேன். அந்தச் சமயத்தில் இயக்குநர் ஷாஜி 'வாண்டு' படத்தை திரையிட்டுக் காட்டினார்.
"படம் எனக்குப் பிடித்திருந்த தால் என்னுடைய சொந்தப் படத்தின் பட்ஜெட்டை எடுத்து இந்தப் படத்தில் முதலீடு செய்து வெளியிடுகிறேன்," என்கிறார் விஜயகுமார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!