ராசிபலன்

மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்

கும்பம்

இன்றைய பலன் 22-2-2019

குடும்ப நலனுக்கான முயற்சி ஒன்று இன்று இனிதே வெற்றி பெறும் வாய்ப்புள்ளது. உங்கள் தவறுகளை திருத்திக் கொள்ளும் வாய்ப்பு கிட்டும். இதை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்வது உங்கள் பொறுப்பு. 
அதிர்ஷ்ட எண்கள்: 3, 7.
நிறம்: அரக்கு, வெளிர்பச்சை.

வாரப்பலன்- 17-2-2019 முதல் 23-2-2019 வரை உள்ள கிரக நிலை 

உங்கள் ராசிக்கு 11ஆம் இடத்திற்கு வருகைபுரியும் கேதுவின் இடப்பெயர்ச்சி அற்புதம் எனலாம். இங்குள்ள சுக்கிரன், சனீஸ்வரனும் யோகப் பலன்களைத் தருவர். ராசியில் உள்ள புதன், 3ஆம் இட செவ்வாய், 6ஆம் இட சந்திரன் அனுக்கிரகம் பொழிவர். ஜென்ம ஸ்தான சூரியன், 10ஆம் இட குருவால் நலமில்லை. 5ஆம் இடம் வரும் ராகுவின் இடப்பெயர்ச்சி அனு கூலமாக அமையவில்லை.

எதிலும் முன்வைத்த காலை பின்வைக்காதவர்கள் என உங்களைக் குறிப்பிடலாம். இவ்வாரம் சில விஷயங்களைச் சாதிப்பீர்கள். உங்கள் மனதில் நல்ல பல சிந்தனைகள் உதிக்கும். எதை, எப்போது, எப்படிச் செய்து முடிக்க வேண்டும் என்று துல்லியமாகக் கணக்கிட்டு அதன்படி செயல்படுவீர்கள். உங்களது செயலாற்றல் சிறக்கும். அடுத்து வரும் நாட்களில் வருமான நிலை திருப்திகரமாக இருக்கும். உபரி வருமானம் கிடைப்பது சந்தேகம்தான் என்றாலும் வழக்கமான வரவுகளில் எந்தக் குறையும் இருக்காது. உடல்நலம் பொதுவாக நன்றாகத்தான் இருக்கும். சிறு உபாதைகள் தோன்றி மறைவது குறித்து கவலைப்பட ஒன்றுமில்லை. 

தற்போது பணிச்சுமை அதிகமாக இருக்கும் என்றாலும் தடைகள் இல்லா ததால் திட்டமிட்ட பணிகளை குறித்த நேரத்தில் முடித்து ஆதாயம் காண்பீர்கள். புது முயற்சிகளை மேற்கொள்ளலாம் என்றாலும் அதிக முதலீடுகள் கூடாது. நிச்சயித்த சுபகாரியங்கள் அமோகமாக நடந்தேறும். வழக்குகள் இழுத்தடிக்கும். பணியாளர் கள் சக ஊழியர்களை அனுசரித்து நடப்பது நல்லது. வியாபாரத்தில் லாபம் அதிகரிக்காது. வார இறுதியில் நண்பர்கள் உதவியுடன் முக்கிய பொறுப்புகளை நிறைவேற்றலாம்.

குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை இருக்கும். விருந்தினர் வருகை மகிழ்ச்சி தரும்.

அனுகூலமான நாட்கள்: பிப்ரவரி 21, 23.
அதிர்ஷ்ட எண்கள்: 5, 6.