ராசிபலன்

மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்

மேஷம்

இன்றைய பலன் 22-2-2019

எதைச் செய்தால் அதிக ஆதாயங்கள் கிட்டும் என உங்கள் மனம் சொல்கிறதோ அதில் கூடுதல் கவனம் செலுத்தப் பாருங்கள். தடைகள் அதிகம் இருக்காது. எதிர் பார்த்த சில தொகை ஒன்று கிடைக்கும் உண்டு.

அதிர்ஷ்ட எண்கள்: 2, 7. 
நிறம்: நீலம், வெளிர்பச்சை.

வாரப்பலன்- 17-2-2019 முதல் 23-2-2019 வரை உள்ள கிரக நிலை 

உங்கள் ஜென்ம ராசிக்கு 3ஆம் இடத்திற்கு வரும் ராகு, 9ஆம் இடத்தில் கால்பதிக்கும் கேதுவின் இடப்பெயர்ச்சி உங்களுக்குச் சாதகமாக அமையும். 4ஆம் இட சந்திரன், 9ஆம் இட சுக்கிரன், 11ஆம் இட புதன், சூரியன் சுபப் பலன்களைத் தருவார்கள். ராசியில் உள்ள செவ்வாய், 8ஆம் இட குரு, 9ஆம் இட சனீஸ்வரனால் அனுகூலம் இருக்க வாய்ப்பில்லை.

எத்தகைய சூழ்நிலையிலும் மன உறுதி குலைந்து விடாது தைரியமாகச் செயல்படக்கூடியவர்கள் நீங்கள். ராகு, கேதுவின் பெயர்ச்சிகள் சாதகமாக அமைந்ததால் அனுகூலங்கள் சற்றே அதிகரிக்கும். மறுபக்கம், எல்லாமே சாதகமாகத்தான் நடக்கும் என்கிற மிதமிஞ்சிய எதிர்பார்ப்பு மட்டும் கூடாது. அடுத்து வரும் நாட்களில் உங்கள் மனதில் நல்ல சிந்தனைகள் உதிக்கும். எத்தகைய பொறுப்புகளையும் தைரியமாக ஏற்கும் மனநிலையுடன் வலம் வருவீர்கள். இதற்கேற்ப உடல்நலம் நன்றாக இருக்கும். உபாதைகள் ஏதும் தலைதூக்காது. வரவுகள் ஓரளவு திருப்திகரமாக இருக்கும். நண்பர்களில் சிலரது ஆதரவு உண்டு. பண விவகாரங்களில் எச்சரிக்கை தேவை.

திட்டமிட்டபடி வேலைகள் பல வற்றைச் செய்து முடித்து நிம்மதி காணலாம். பணியாளர் களுக்கு சிறப்புச் சலுகைகள் சில கிடைக்கும் வாய்ப்புண்டு. செய்தொழிலில் விறுவிறுப்பு அதிகரிக் கும். வார இறுதியில் மறைமுக எதிரிகளின் ஆதிக்கம் இருக்கும். இச்சமயம் கவனம் தேவை.
குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகள் அன் பாகவும் அனுசரணையாகவும் இருப்பர்.

அனுகூலமான நாட்கள்: பிப்ரவரி 18, 20.
அதிர்ஷ்ட எண்கள்: 2, 9.