ராசிபலன்

மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்

கடகம்

இன்றைய பலன் 22-2-2019

நீண்ட நாட்களாக தலைவலி தந்த பண விவகாரம் ஒன்று இன்று நல்ல தீர்வைக் காணும். சிக்கனம் என்ற பெயரில் குடும் பத்தாரிடம் அதிக கெடுபிடிகள் காட்ட வேண்டாம். மாறாக சிறு செலவுகளை அனுமதிப்பது நல்லது.

அதிர்ஷ்ட எண்கள்: 4, 9.
நிறம்: பச்சை, மஞ்சள்.

வாரப்பலன்- 17-2-2019 முதல் 23-2-2019 வரை உள்ள கிரக நிலை 

நிழல்கிரகம் எனப்படும் கேதுபகவான், மகர ராசி யில் இருந்து விலகி பின்னோக்கி நகர்ந்து தனுசு ராசியில் பிரவேசிக்கிறார். இது உங்கள் ராசிக்கு 6ஆம் இடமான அனுகூலமான இடம். இங்குள்ள சனி, சுக்கிரனும் ஏற்றங்களைத் தருவர். ராசியிலுள்ள சந்திரன், 5ஆம் இட குரு, 8ஆம் இட புதன், 10ஆம் இட செவ்வாய் அனுக்கிரகம் புரிவர். 8ஆம் இட சூரியன், 12ஆம் இடம் வரும் ராகுவால் நலமில்லை.

அதிக எதிர்பார்ப்புகள் இன்றி இருப்பதைக் கொண்டு திருப்தி காணும் பக்குவசாலிகள் நீங்கள். இவ்வாரம் உங்களது வருமான நிலை திருப்திகரமாக இருக்கும். வரவுகள் சரளமாகக் கைக்கு வந்து சேரும். தேவைகள் அதிகரித்தாலும் எளிதில் ஈடுகட்ட லாம். தற்போது உங்களுக்குரிய பொறுப்புகள் அதிக ரிக்கும். பலரும் தேடி வந்து பல்வேறு வேலைகளை ஒப்படைத்துச் செல்வர். எந்நேரமும் ஏதாவது ஒரு வேலையைக் கவனிக்கும் பொருட்டு ஓடியாடிக் கொண்டிருப்பீர்கள். இறுதியில் காரியவெற்றி பெறு வீர்கள்.  இச்சமயம் நெருக்கமானவர்கள் என்றாலும் கூட, பணம் கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கையாக இருங்கள். யாருக்காகவும் எக்காரணம் கொண்டு பிணை நிற்க வேண்டாம். சுபப்பேச்சுகள் முன் னேற்றம் காணும். சொத்துகள் குறித்த நீண்ட நாள் வில்லங்கம் இப்போது சரியாகும். பணியாளர்கள் உயரதிகாரிகளை அனுசரித்து நடப்பது புத்திசாலித் தனம். வியாபார விரிவாக்க பணிகளை ஒத்திப் போடுவது நல்லது. வார இறுதியில் முக்கியஸ்தர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிட்டும். அத்தொடர்புகள் எதிர் காலத்தில் உதவிகரமாக இருக்கும்.

குடும்பத்தில் நிம்மதி நிலவும். உறவு வட்டாரத்தில் ஒரு சிலர் அன்பாகவும் ஆதரவாகவும் இருப்பர்.

அனுகூலமான நாட்கள்: பிப்ரவரி 17, 18.
அதிர்ஷ்ட எண்கள்: 1, 6.