ராசிபலன்

மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்

மிதுனம்

இன்றைய பலன் 22-2-2019

கூடுமான வரை இன்று பணம் கொடுக்கல் வாங்கலை தவிர்க்கப் பாருங்கள். தடைகள் அதிகம் இருக்காது. பல நாட்களாக அரைகுறையாக விட்டிருந்த பணி ஒன்று இன்று நல்லபடியாக முடிந்திடும். நண்பர்கள் ஆதரவுண்டு.

அதிர்ஷ்ட எண்கள்: 3, 9. 
நிறம்: அரக்கு, பொன்னிறம்.

வாரப்பலன்- 17-2-2019 முதல் 23-2-2019 வரை உள்ள கிரக நிலை 

ஜென்ம ராசிக்கு 9ஆம் இடத்தில் சஞ்சரிக்கும் சூரியன், புதன் அனுக்கிரகம் பொழிவர். 2ஆம் இட சந்திரன், 11ஆம் இட செவ்வாய் நற்பலன்களைத் தரு வர். 6ஆம் இட குரு, 7ஆம் இட சுக்கிரன், சனியின் சுபத்தன்மை கெட்டிருக்கும். ஜென்ம ஸ்தானம் வரும் ராகு, 7ஆம் இடத்திற்குப் பெயரும் கேது ஆகியோரின் இடமாற்றங்கள் அனுகூலமாக இல்லை.

சூழ்நிலைக்கேற்ப வளைந்து கொடுத்து சாமர்த்திய மாகச் செயல்படக்கூடிய திறமைசாலிகள் நீங்கள். அடுத்து வரும் நாட்களில் உங்களது உடல்நலம் ஒரே சீராக இருக்காது. சில சமயம் புயல் வேகத்தில் செயல்படுவீர்கள் எனில், சில சமயம் சோம்பலாக இருப்  பீர்கள். பணிச்சுமை அதிகரிக்கும் நேரம் இது. காரியத் தடைகளும் இருக்கும் என்பதால் வழக்கமான பணிகளிலும் இரட்டிப்பு கவனத்துடன் செயல்படுவது முக்கியம். நண்பர்களில் ஒருசிலர் மட்டும் உண்மை யான நட்பு பாராட்டுவர். சொத்துகள் குறித்து அவசர முடிவுகள் எடுப்பது கூடாது. 

பயணங்களை ஏற்கும் முன் அவற்றால் ஆதாயம் இருக்குமா என உறுதி செய்து கொள்ளுங்கள். வரவுகள் ஒரே சீராக இருக் காது. செலவுகளும் தேவைகளும் அதிகரிப்பதால் ஒருசிலருக்கு பற்றாக்குறை ஏற்படலாம். பணியா ளர்கள் கடுமையாக உழைத்தால் மட்டுமே ஏற்றம் காண முடியும். வியாபாரிகள் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்க வேண்டிய நேரம் இது. வார இறுதியில் ஒருசிலரால் சிறு பிரச்சினைகள் ஏற்படக் கூடும். அவற்றை கவனமாகக் கையாளுங்கள்.
வீட்டில் சகஜநிலை இருக்கும். உடன்பிறந்தோர் வகையில் செலவுகள் அதிகரிக்கும்.

அனுகூலமான நாட்கள்: பிப்ரவரி 20, 23.
அதிர்ஷ்ட எண்கள்: 5, 9.