ராசிபலன்

மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்

துலாம்

இன்றைய பலன் 22-2-2019

எதிரிகளையும் அரவணைத்துச் செயல்பட வேண்டிய நாள் இது. கூடுமானவரை தனிப்பட்ட உணர்வுகளை வெளிக்காட்டிக் கொள்ளாது அமைதியாகவும், பக்குவ மாகவும் நடை போடப் பாருங்கள்.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5.
நிறம்: பச்சை, வெண்மை.

வாரப்பலன்- 17-2-2019 முதல் 23-2-2019 வரை உள்ள கிரக நிலை 

உங்கள் ராசிக்கு மிதுன ராசியில், அதாவது 9ஆம் இடத்தில் கால்பதிக்கும் ராகு, தனுசு ராசியில் 3ஆம் இடத்தில் பிரவேசிக்கும் கேதுவின் இடப்பெயர்ச் சிகள் சிறப்பாக உள்ளன. 2ஆம் இட குரு, 3ஆம் இட சனி, சுக்கிரன், 5ஆம் இட புதன், 10ஆம் இட சந்திரன் ஏற்றங்களைத் தருவார்கள். 5ஆம் இட சூரியன், 7ஆம் இட செவ்வாயால் நலமில்லை.

எதையும் ஒருமுறைக்குப் பலமுறை சரிபார்த்து செயல் படக்கூடியவர்கள் நீங்கள். அடுத்து வரும் நாட்களில் உங்களது வாழ்க்கைப் பயணத்தில் பல இனிக்கும் விஷயங்கள் அரங்கேறும் என்பதை மறுப்பதற்கில்லை. இவ்வாரம் உங்கள் மனதில் உற்சா கமும் உத்வேகமும் குடிகொண்டிருக்கும். எத்தகைய பொறுப்புகளையும் நிறைவேற்ற இயலும் என மார் தட்டுவீர்கள். இதற்கேற்ப உங்களது திறமைகள் பளிச்சிடும். பொருளாதார ரீதியில் தெம்பாக இருப்பீர்கள். 

ஒருபக்கம் எதிர்பார்த்த தொகைகள் பல வந்து சேர, மறுபக்கம் எதிர்பாராத இனங்கள் வகையிலும் ஆதாயமடைவீர்கள்.  பணம் தொடர்பி லான சிக்கல்கள் முடிவுக்கு வரும். சுப காரியங்கள் திட்டமிட்டபடி நடக்கும். காரியத் தடைகள் என்பன இருக்கும்தான். எனினும் அவற்றைச் சமாளித்து முக்கிய பொறுப்புகளைக் கச்சிதமாக நிறைவேற்றிடு வீர்கள். 

பயணங்கள் பயன்தரும் என்பதுடன் இனிய அனுபவங்களையும் தரும். பணியாளர்களின் செல்வாக்கு, சொல்வாக்கு உயரும். புதிய வேலை தேடும் முயற்சியில் இருப்பவருக்கு நற்பலன் கிட்டும். வியாபாரத்தில் புதிய நெளிவு சுளிவுகள் புரிபடும். வார இறுதியில் எதிர்பார்த்த சுபத்தகவல்கள் கிட்டும். இச்சமயம் திடீர் ஆதாயம் கிடைக்கலாம். குடும்ப நலனுக்கான முயற்சிகள் முன்னேற்றம் காணும். பிள்ளைகள் ஏற்றம் காண்பர்.

அனுகூலமான நாட்கள்: பிப்ரவரி 18, 19.
அதிர்ஷ்ட எண்கள்: 3, 7.