ராசிபலன்

மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்

மீனம்

இன்றைய பலன் 22-2-2019

எந்தவிதமான உதவிகளையும் எதிர் பார்க்காமல் தனித்துச் செயல்படப் பாருங்கள். இன்று உங்களது செயல்திட்டங்கள் பலவும் கச்சிதமாக அமையும். பலரது பாராட்டுகளைப் பெற்று மகிழ்வீர்கள். திடீர் செலவுகள் முளைக்கலாம்.
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3.
நிறம்: பச்சை, வெளிர்நீலம்.

வாரப்பலன்- 17-2-2019 முதல் 23-2-2019 வரை உள்ள கிரக நிலை 

உங்கள் ராசிக்கு 5ஆம் இடத்தில் உலவும் சந்திரன் அனுக்கிரகம் பொழிவார். 9ஆம் இட குரு, 10ஆம் இட சுக்கிரன், 12ஆம் இட புதன் மேன்மையான பலன்களைத் தருவார்கள். 2ஆம் இட செவ்வாய், 10ஆம் இட சனி, 12ஆம் இட சூரியனால் நலமில்லை. சாயா கிரகங்களான ராகு 4ஆம் இடம் வருவதும், கேது 10ஆம் இடத்தில் பிரவேசிப்பதும் சாதகமற்ற இடப்பெயர்ச்சியாக அமையும்.

எல்லோரும் எல்லா வளங்களும் பெற்று மகிழ்ச்சி யாக வாழ வேண்டும் என்று நினைக்கும் நல்லுள்ளம் கொண்டவர்கள் என உங்களைக் குறிப்பிடலாம். அடுத்துவரும் நாட்களில் உங்கள் எண்ணப்படியே சிலபல விஷயங்கள் நடந்தேறும். அதேசமயம் சிறு ஏமாற்றங்களையும் எதிர்கொண்டு ஜீரணித்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருப்பீர்கள். அடுத்து வரும் நாட்களில் சில பணிகளை தொடங்கிய வேகத்திலேயே செய்து முடித்திடுவீர்கள்.  எதிர்பார்த்த தொகைகள் அனைத்தும் உடனுக்குடன் கைக்கு வந்து சேரும். மறுபக்கம் செலவுகளைக் கட்டுப்படுத்த இயலாது தடுமாறுவீர்கள். முக்கியத் தேவைகள், வீண் செலவுகள் என கையில் உள்ள பணம் ஏதாவது ஒருவகையில் வேகமாகக் கரைந்திடும்.

உடல்நலம் இ லேசாகப் பாதிக்கப்படலாம். எனினும் கவலைப்படத் தேவையில்லை.  உடனுக்குடன் குணமடைவீர்கள். புதிய சுபப்பேச்சுக்களைத் தொடங்க இது சுபமான நேரமே. நண்பர்களில் ஒரு சிலர் காரியவாதிகளாக மாறுவதைக் கண்டு வருந்தத் தேவையில்லை. மாறாக நீங்களாக ஒதுங்கிவிடுங்கள்.  பணியாளர்களுக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும். கூட்டுத் தொழில் புரியும் வியாபாரிகள் ஏற்றம் காண்பர். வார இறுதியில் சுபத்தகவல் கிட்டும்.

குடும்பத்தார் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து நடந்தால் குடும்ப அமைதி காக்கலாம்.

அனுகூலமான நாட்கள்: பிப்ரவரி 18, 19.
அதிர்ஷ்ட எண்கள்: 2, 7.