ராசிபலன்

மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்

தனுசு

இன்றைய பலன் 22-2-2019

நன்கு பேசிப் பழகிய ஒருசிலர் திடீர் என எதிர்ப்பு காட்டலாம். பதிலுக்கு நீங்களும் முறைப்பது சரியல்ல. சிறு தடைகள் காரணமாக சில பணிகள் தாமதப்படலாம். எனினும் பாதிப்புகள் ஏதும் இருக்காது.

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5. 
நிறம்: இளஞ்சிவப்பு, ஊதா.

வாரப்பலன்- 17-2-2019 முதல் 23-2-2019 வரை உள்ள கிரக நிலை 

உங்கள் ஜென்ம ராசியில் அமர்ந்திருக்கும் சுக் கிரன் அனுக்கிரகம் பொழிவார். 3ஆம் இட புதன், சூரியன் நற்பலன்களைத் தருவார்கள். ஜென்ம சனி, 5ஆம் இட செவ்வாய், 8ஆம் இட சந்திரன், 12ஆம் இட குரு ஆகியோரின் சுபத்தன்மை கெடும். ஜென்ம ஸ்தானத்துக்கு வரும் கேது, 7ஆம் இடத்தில் கால் பதிக்கும் ராகுவின் இடமாற்றங்கள் அனுகூலமற்றவை.

வாழ்க்கைப் பயணத்தில் சந்திக்கும் இன்ப துன்பங்களை யதார்த்தமாக எடுத்துக்கொள்ளும் பக்குவ சாலிகள் என உங்களைக் குறிப்பிடலாம். அடுத்து வரும் நாட்களில் அதிகம் பேசாமல் காரியத்திலேயே குறியாக இருக்கப் பாருங்கள். இதன் மூலம் தேவை யற்ற சிக்கல்களைத் தவிர்க்க இயலும். சுற்றி இருப்பவர்களில் அனைவருமே நல்லவர்கள் என்று சொல்வதற்கில்லை. அதே சமயம் யாரையும் தேவையின்றிச் சந்தேகப்படுவதும் கூடாது. கூடுமானவரை தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருப்பது நல்லது. தற்போது உங்களுக்குரிய வருமானம் குறைவாக இருக்கும். செலவுகளும் விரயங்களும் அதிகரிக்கும் என்பதால் சிக்கன நடவடிக்கை நிச்சயம் தேவை. சுப காரியங்கள் தொடர்பிலான முயற்சிகளில் சிறு இழு பறி நிலவும். முக்கிய வேலைகளை முடிக்க சற்றே சிரமப்படுவீர்கள்.

இச்சமயம் நண்பர்கள் கூறும் ஆலோசனைகளை ஏற்கத் தயங்க வேண்டாம்.  பணி யாளர்களின் திறமைக்குப் பரிசாக சிறப்புச் சலுகைகள் கிடைத்திடும். வியாபாரிகள் புதியவர்கள் கூட்டு சேர்த்துக்கொள்ள வேண்டாம். வார இறுதியில் உங்களில் ஒருசிலருக்கு எதிர்பாராத ஆதாயம் கிடைக்க வாய்ப்புள்ளது. ராகு, கேது, குரு, சனிக்கு உபரி பரிகாரங்களைச் செய்வது நல்லது. ஆஞ்சநேயரை வழிபடுவதால் சங்கடங்கள் குறையும்.
குடும்பத்தில் சிறு பிரச்சினைகள் இருக்கலாம். பிள்ளைகள் உடல்நலன் சற்றே பாதிக்கப்படலாம்.

அனுகூலமான நாட்கள்: பிப்ரவரி 21, 23.
அதிர்ஷ்ட எண்கள்: 5, 9.