ராசிபலன்

மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்

விருச்சிகம்

இன்றைய பலன் 22-2-2019

முன்பு தடைபட்டிருந்த சில முக்கிய பணிகள் முன்னேற்றம் காண்பது உற்சாகமும் நிம்மதியும் தரும். இன்று ஆதாயங்களுக்கு குறைவில்லை. அதேசமயம் திடீர் செலவுகள் முற்றுகையிடும் வாய்ப்புண்டு.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 4.
நிறம்: வெண்மை, நீலம்.

வாரப்பலன்- 17-2-2019 முதல் 23-2-2019 வரை உள்ள கிரக நிலை 

வாரத்தொடக்கத்தில் உங்கள் ராசிக்கு 9ஆம் இடத்தில் கால்பதிக்கும் சந்திரன் அனுக்கிரகம் பொழிவார். 2ஆம் இட சுக்கிரன், 4ஆம் இட புதன், 6ஆம் இட செவ்வாய் ஆகியோர் அனுகூலங்களைத் தருவார்கள். ராசியிலுள்ள குரு, 2ஆம் இட சனி, 4ஆம் இட சூரியனின் சுபத்தன்மை கெடும். 2ஆம் இடம் வரும் கேது, 8ஆம் இடத்தில் பிரவேசிக்கும் ராகுவின் இடப் பெயர்ச்சிகள் சாதகமாக இல்லை.

பிறருக்கு உதவுவதில் மனநிறைவு காணும் நல்ல வர் என உங்களைக் குறிப்பிடலாம். இவ்வாரம் எதைச் செய்தால் ஆதாயம் காணலாம் என்பதை முன்கூட்டியே கணக்கிட்டு அதற்கேற்ப கச்சிதமாக நடை போடப் பாருங்கள். தேடிவரும் நல்ல ஆலோசனைகளை ஏற் பதில் தவறில்லை. அதேசமயம் எதிலும் இறுதி முடி வெடுப்பது நீங்களாகத்தான் இருக்க வேண்டும். உடல்நலம் ஒரே சீராக இருக்காது. எனவே வீண் அலைச்சலைத் தவிர்த்திடுங்கள். உபாதைகள் சிறி தாக இருக்கும்போதே உரிய சிகிச்சை பெறுவது நல்லது. குடும்பத்தார் நலனிலும் கூடுதல் அக்கறை தேவை. வரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும். செல வுகள் இரட்டிப்பாகும் நேரமிது. எனவே சரியாகத் திட்டமிட்டுச் செயல்படவில்லை எனில் பற்றாக் குறை நிலை ஏற்படக்கூடும். தடைகள் அதிகரிக்கும் நேரமிது. எனவே நன்கு பழக்கமுள்ள, சுலபமான, ஆதாயம் தரக்கூடிய இனங்களில் மட்டும் கால் பதியுங்கள். புதிய சொத்துகள்  வாங்குவது தொடர் பில் வீண் அவசரம் கூடாது. பணியாளர்களுக்கு சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். வியாபாரிகள் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட இது உகந்த நேரம் அல்ல. வார இறுதியில் மேற்கொள்ளும் பயணங்கள் பயனுள்ளதாக அமையும். 

வீட்டில் சிறு சலசலப்புகள் தோன்றி மறையும். குடும்பத்தார் உடல்நலனில் கூடுதல் கவனம் தேவை.
அனுகூலமான நாட்கள்: பிப்ரவரி 20, 22.
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5.