ராசிபலன்

மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்

ரிஷபம்

இன்றைய பலன் 22-2-2019

எந்த விஷயமாக இருப்பினும் உங்களது கருத்துக்களை தெளிவாகவும், ஆணித்தரமாகவும் முன்வைக்க வேண்டும். இன்று வெளி வேலைகளில் பல சுலபத்தில் நடந்தேறும். ஆதாயங்கள் மனநிறைவு தரும். செலவுகள் அதிகம்தான்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 4. 
நிறம்: வெண்மை, சிவப்பு.

வாரப்பலன்- 17-2-2019 முதல் 23-2-2019 வரை உள்ள கிரக நிலை 

வாரத் தொடக்கத்தில் உங்கள் ராசிக்கு 3ஆம் இடத்தில் உலவும் சந்திரன் அனுக்கிரப்பார்வை வீசு வார். 7ஆம் இட குரு, 8ஆம் இட சுக்கிரன், 10ஆம் இட புதன், சூரியன் மேன்மையான பலன்களைத் தரு வார்கள். 8ஆம் இட சனி, 12ஆம் இட செவ்வாயால் நலமில்லை. 2ஆம் இடத்திற்கு பின்னோக்கி நகர்ந்து வந்திருக்கும் ராகு, 8ஆம் இடத்தில் பிரவேசித்துள்ள கேதுவின் இடப்பெயர்ச்சிகள் சாதகமாக இல்லை.

யாருக்காகவும் எதற்காகவும் தனிப்பட்ட கொள்கை களை விட்டுக்கொடுக்காதவர்கள் நீங்கள். அடுத்து வரும் நாட்களில் அதிகம் பேசாமல் காரியத்திலேயே குறியாக இருக்கப் பாருங்கள். இதன் மூலம் தேவை யற்ற சிக்கல்களைத் தவிர்க்க இயலும். பொதுவாக வருமான நிலை ஓரளவு திருப்திகரமாக இருக்கும். எதிர்பார்த்த தொகைகள் உரிய நேரத்தில் வந்து சேரும். செலவுகளும் விரயங்களும் அதிகரிக்கும் நேரமிது. எனவே சிக்கன நடவடிக்கை நிச்சயம் தேவை.

சுப காரியங்கள் தொடர்பிலான முயற்சிகளில் சிறு இழுபறி நிலவும். முக்கிய வேலைகளை முடிக்க சற்றே சிரமப்படுவீர்கள். ஏனெனில் காரியத் தடைகள் அதிகரிக்கும் நேரமிது. தகுந்த செயல் திட்டங்கள், கூடுதல் உழைப்பின்றி சாதிக்க இயலாது. உடல் நலம் இலேசாகப் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. கொலஸ்டிரால், இனிப்பு நீர் பிரச்சினை உள்ளவர்கள் கூடுதல் அக்கறை செலுத்தவேண்டும். பணியாளர் களின் திறமைக்குப் பாராட்டுகள் கிடைத்திடும். வியாபாரிகள் புதியவர்களை கூட்டு சேர்த்துக்கொள்ள வேண்டாம். வார இறுதியில் உங்களில் ஒருசிலருக்கு எதிர்பாராத ஆதாயம் கிடைக்க வாய்ப்புள்ளது.

வீட்டில் வழக்கமான சூழ்நிலை இருக்கும். பெற்றோர் கூறும் அறிவுரைகள் கைகொடுக்கும்.

அனுகூலமான நாட்கள்: பிப்ரவரி 20, 21.
அதிர்ஷ்ட எண்கள்: 1, 5.