இந்தியாவில் தயாராகும் போர் விமானம்

புதுடெல்லி: இந்தியாவுக்காக வடி வமைக்கப்பட்ட போர் விமானத்தை லாக்ஹீட் நிறுவனம் வெளியிட்டது.
ஏற்கெனவே இந்தியாவிலேயே போர் விமானங்களைத் தயாரிக்க அந்நிறுவனம் முன்வந்துள்ளது.
இதன் மதிப்பு 15 பில்லியன் டாலராகும்.
எஃப்-16 போர் விமானங்களை இந்தியாவில் தாங்கள் தயாரிக்க இருப்பதன் மூலம் போர் விமான ஏற்றுமதி மையமாக இந்தியா மாறும் என லாக்ஹீட் மார்டின் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அடுத்த முப்பது ஆண்டுகளில் 16,500 கோடி டாலராக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ள எஃப்-16 போர் விமானச் சந்தையில் இந்தியா நுழைவதற்கு இது உதவும் எனவும் லாக்ஹீட் மார்டின் கூறியது. "இந்தியாவில் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ள எஃப்-16 போர் விமானம் இதுவரை தயாரிக் கப்பட்டுள்ள எஃப்-16 போர் விமானங்களில் மிகவும் அதிக வலிமை உடையதாகவும் மேம்பட்ட தொழில்நுட்பம் உடைய தாகவும் இருக்கும்," என்று லாக்ஹீட் மார்டினின் உத்தி, தொழில் மேம்பாட்டுப் பிரிவின் துணைத் தலைவர் விவேக் லால் கூறியதாக த இந்து குறிப்பிட்டது.

எஃப்-16 விமான தயாரிப்பு இந்தியாவில் ஆரம்பிக்கும் நாளி லிருந்து ஐந்து ஆண்டுகளுக்குள் ஏற்றுமதி தொடங்கும் எனவும் 200க்கும் மேற்பட்ட விமானங்கள் ஏற்றுமதி செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.
எஃப்-16 வகை விமான தயாரிப்புப் பொருட்களை `மேக் இன் இந்தியா' திட்டப்படி இந்தியா விலுள்ள 100 விற்பனை யாளர்களிடம் பாகங்கள் தரு விக்கப்படவிருக்கிறது.
இதற்கிடையே பெங்களூரு நகரின் புறநகர் பகுதியில் உள்ள ஹெலங்கா விமானப்படை தளத்தில் நடந்த 'ஏரோ இந்தியா' இந்திய விமானங்கள் தொடர்பான 12ஆம் ஆண்டு கண்காட்சியில் பேசிய ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்தியாவில் தயாரிக் கப்பட்ட 228 டோர்னியர் ரக விமானங்கள் மற்றும் ஏ.எல்.ஹெச் துருவ் என 228 விமானங்கள் ஆப்கானிஸ்தான், மொரீசியஸ், மாலத்தீவு, நேப்பாளம் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப் பட்டதாகத் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!