18வது உலகத்தமிழ் இணைய மாநாடு

18வது உலகத்தமிழ் இணைய மாநாடு வரும் செப்டம்பர் 20ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ளது.
இந்த மாநாடு குறித்து நேற்று அண்ணா பல்கலைக்கழகத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது.
அப்போது பேசிய துணை வேந்தர் சூரப்பா, தாய்மொழியைப் படிக்க இந்த தலைமுறையினர் தயக்கம் காட்டுவதாகவும் கணி தம், அறிவியல் பாடங்களை 10ஆம் வகுப்பு வரை தாய்மொழி யிலேயே கற்கவேண்டும் என்றும் கூறினார்.
"தமிழை 'டிஜிட்டல்' வடிவத் திற்கு முழுமையாகக் கொண்டு செல்வதே மாநாட்டின் முக்கிய நோக்கம் என்ற சூரப்பா, தமிழ் மொழியின் அடிப்படையில் இணை யம் வழியாக அனைத்தையும் பயன்படுத்தமுடியும் என்றும் கூறினார்.
மென்பொருள் மேம்பாட்டை தமிழிலேயே கொண்டுவர நட வடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
தமிழ், இலக்கியம், அறிவியல், தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்தையும் இணையத்தில் தமிழ்மொழியில் கொண்டுவந்தால் மாணவர்கள் பள்ளியில் பயிலும் போதே இணையம் வழியாக அறிவியல், தொழில்நுட்பங்கள் குறித்து அறிந்துகொள்ள முடியும் என்றும் தாய்மொழியில் கற்றால் தான் பாடங்களின் அடிப்படையைப் புரிந்துகொண்டு உயர்கல்வி கற்க அது எளிதாக அமையும் என்றும் சூரப்பா கூறியுள்ளார்.
இச்சந்திப்பில் அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பா, உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றத் தலைவர் மணியம், கிண்டி பொறியியல் கல்லூரி தலைவர் கீதா, கோவை வேளாண் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ராமசாமி ஆகியோர் கலந்துகொண்டு செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!