இந்தியா | த‌மிழ் முர‌சு - Tamil news

இந்தியா

கருணாநிதி-விஜயகாந்த் சந்திப்பு, பரபரப்பு
27/04/2015

தமிழ் நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் அரசியல் அதிர்வேட்டுகள் பரபரப்பாக கிளம்பத் தொடங்கி விட்டன. இவற்றில் குறிப்பிடத்தக்க முதல் தடாலடியாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று திடீரென்று திமுக தலைவர் கருணாநிதியை அவரின் வீட்டுக்கே சென்று சந்தித்தார். “நாட்டிற்காக, ஏழை மக்களின் நலனுக்காக திமுக தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்துப் பேசினேன்.

27/04/2015

இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் குடிப்பழக்கம் காரணமாக கடந்த ஐந்து ஆண்டுகளில் 2.5 லட்சம் பெண்கள் இளம் வயதிலேயே விதவையாகி விட்டதாகவும் அவர்கள் தங்கள் பிள்ளை களுடன் சொல்லமுடியாத அளவுக்குச் சிரமங்களை அனுபவித்து வருவதாகவும் கலலை தெரிவிக்கப்பட்டுள்ளது.

27/04/2015

மதுரை: மேலூரில் உள்ள 21 வயதுக்குட்பட்ட குற்றவாளிகளை அடைக்கும் சிறார் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டுள்ள சிறுவர்கள் இடையே நேற்று முன்தினம் பயங்கர மோதல் வெடித்தது.

27/04/2015

சென்னை: தமிழக அரசு மீது வழக்கு தொடரப் போவதாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினரான அவர் நேற்று முன்தினம் தொகுதி மக்களை சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தார்.

27/04/2015

சென்னை: பெண்களை வைத்து ஆபாசப் படம் எடுத்து இணையதளங்கள் மூலம் விற்றதற்காக ஆயுள் தண்டனை பெற்ற மருத்துவர் பிரகாஷ் 15 ஆண்டுகால சிறை வாசத்திற்குப் பின்னர் விடுதலையாகியுள்ளார்.

27/04/2015

வேலூர்: நிலம் கையகப்படுத்துதல் அவசரச் சட்டத்தை விவசாயிகளின் துணையோடு முறியடிப்போம் என்று மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார். ராணிப்பேட்டையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், ஏழை விவசாயிகளின் நிலங்களைப் பறித்து பெரு முதலாளிகளுக்கு தாரை வார்க்கும் நோக்கில் மத்திய அரசு செயல்படுவதாகக் குற்றம்சாட்டினார்.

மஞ்சுவிரட்டுக்கு தடை கூடாது: மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்
26/04/2015

புதுடெல்லி: மக்களின் மதம், கலாச்சாரம் சார்ந்த மஞ்சு விரட்டு போட்டிக்குத் தடை விதிப்பதால் பாரம்பரிய கலாசார மாண்பு சீர்குலையும் அபாயம் ஏற்படும் என்று மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.

வட இந்தியாவில் பலத்த நிலநடுக்கம்: 34 பேருக்கு மேல் பலி
26/04/2015

புதுடெல்லி: டெல்லி மற்றும் வட இந்தியாவில் ஒரு சில இடங்களில் நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 என்ற அளவில் பதிவானது. 45 வினாடிகளுக்கு நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால் மக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

2ஜி: கடப்பிதழ்களை முடக்கக் கோரிக்கை
26/04/2015

புதுடெல்லி: மத்திய தொலைத் தொடர்புத்துறை முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன் மற்றும் அவரது சகோதரர் கலாநிதி மாறன் ஆகியோரது கடப்பிதழ் களை முடக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்குமா? என நாடாளுமன்றத்தில் அதிமுக கேள்வி எழுப்பியுள்ளது.

26/04/2015

திருப்பூர்: பல்லடம் அருகே கார் மீது சரக்கு லாரி மோதியதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த சித்தார்த் என்பவர் தனது குடும்பத்தினருடன் உதகைக்கு சுற்றுலா வந்தபோது இக்கோரச் சம்பவம் அரங்கேறியது.

Syndicate content