சிங்க‌ப்பூர்

தந்தையை இழந்து கதறியழுத மக்கள்
30/03/2015

முஹம்மது ஃபைரோஸ்

சிங்கப்பூரின் தந்தை திரு லீ குவான் இயூவின் அரசுபூர்வ இறுதிச் சடங்கு நடைபெறும் முன் பாக தெருக்களில் நிரம்பியிருந்த மக்கள், திரு லீயின் உடலை ஏற்றி வந்த பீரங்கி வாகனம் வரும்போது திரு லீக்கு மரியாதை செலுத்தும் விதமாக அவரது காலைத் தொட் டுக் கும்பிடுவது போல் கையை நீட்டி நீட்டிக் கும்பிட்டனர். சிலர் தங்களது துயரத்தை கட்டுப்படுத்த முடியாமல் கதறி அழுதனர்.

சிங்கப்பூரை இத்தனை ஆண்டு களாகக் கட்டிக்காத்து வந்த தேசத் தந்தையை இறுதியாக ஒருமுறை பார்த்துவிட வேண்டும் என்ற எண்ணம் பெருந்தவிப்புடன் மணிக்கணக்காக பொறுமையுடன் காத்திருந்த அனைவரிடையேயும் ஊடுருவி இருந்தது.

திரு லீ போல இன்னொருவர் வரமாட்டார்: அதிபர் டோனி டான்
30/03/2015

திருலீ குவான் இயோ போல இன்னொருவர் என்றுமே கிடைக் கமாட்டார் என நேற்று அரசு மரியாதையுடன் நடந்த இறுதிச் சடங்கின்போது சிங்கப்பூர் அதிபர் டோனி டான் கெங் யாம் கூறினார்.“கடந்த ஒரு வார காலமாக, ஒரு மனிதரின், ஒரு சகாப்தத்தின் மறைவுக்கு நாம் அஞ்சலி செலுத்தி வருகிறோம். இன்னொரு லீ குவான் இயூ இனி என்றுமே கிடைக்கமாட்டார்,” என தமது புகழுரையின் முடிவில் டாக்டர் டான் குறிப்பிட்டார்.

திரு லீயின் வாழ்வும் சுவாசமும் சிங்கப்பூர்
பிரதமர் லீ சியன் லூங் ஆற்றிய இறுதி அஞ்சலி உரையின் முக்கிய பகுதிகள்
30/03/2015

சிங்கப்பூருக்கு இது ஓர் இருள்சூழ்ந்த வாரம்.
இத்தனை ஆண்டுகள் நமக்கு வழி காட்டியாய் இருந்த ஒளி அணைந்து விட்டது. வாழ்ந்த காலமெல்லாம் சிங்கப் பூரே தன் உயிர்மூச்சென வாழ்ந்த நம் தேசத் தந்தை திரு லீ குவான் இயூ அவர்களை இழந்துவிட்டோம்.

திரு லீ குவான் இயூவின் தொடக்க ஆண்டுகள்

சிறுவனாக இருந்தபோது, அரசியல் வாதியாகவோ, அரசியல் மேதையாகவோ ஆகவேண்டும் என திரு லீ எண்ண வில்லை. உண்மையில், அவர் தாத்தாஅவர் ஓர் ஆங்கிலேய கனவானாக மாறவேண்டும் என விரும்பினார். ஆனால், அவரது வாழ்க்கை அனுபவங்கள் மனதில் மாறா சுவடுகளை உண்டாக்கின.
காலனித்துவ சிங்கப்பூரில் அவர் பிரிட்டிஷ் குடிமகனாக இருந்தார்.

நாடே மௌனம் காத்த அந்த ஒரு நிமிடம்!
30/03/2015

தேசத் தந்தையை, தங்களின் மகத்தான தலைவனை இழந்து வாடும் மக்கள் அவருக்குத் தங்கள் இறுதி மரியாதையைச் செலுத்தி, அவர் ஆற்றிய அரும் பணிகளுக்கு நன்றி உரைத்திடும் வகையில் அவரது இறுதி ஊர்வலம் நடந்த அனைத்து சாலைகளின் இருமருங்கிலும் திரண்டு, கண்ணீர் பெருக்கி, கைகூப்பித் தொழுதனர்.

நேற்று திரு லீயின் இறுதிச் சடங்கின்போது நாடு முழுவதும் அவருக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தும் விதமாக பிற்பகல் 4.35 மணிக்கு சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அறிவிப்பு ஒலி எழுப்பியது.

மண்டாயில் கண்ணீருடன் வழியனுப்பு
30/03/2015

திரு லீ குவான் இயூ­வின் குடும்பத்­தி­னர் நேற்று மாலை மண்டாய் தக­னச்­சாலை­யில் நடை­பெற்ற உணர்ச்சி­பொங்­கிய சடங்­கில் திரு லீக்­குப் பிரி­யாவிடை கொடுத்­த­னர். திரு லீயின் நல்­லு­டலைத் தாங்­கிய பேழை தக­னச்­சாலையை வந்தடைந்த­வு­டன், பேழை மீது போர்த்­தப்­பட்­டி­ருந்த தேசி­யக் கொடியை அகற்றி மடித்­த­னர் சீருடை அதி­கா­ரி­கள். திரு லீயின் மூத்த மக­னும் பிர­த­ம­ரு­மான லீ சியன் லூங்­கி­டம் தேசி­யக் கொடி ஒப்­படைக்­கப்­பட்­டது.

சாதனை நாயகனுக்கு சகலரும் அஞ்சலி
30/03/2015

ப. பாலசுப்பிரமணியம்

திரு லீ குவான் இயூவின் 90வது பிறந்தநாள் போன்ற மகிழ்ச்சி கரமான நிகழ்வுகளைக் கண்ட நாடாளுமன்றத்தில் கடந்த சில நாட்களாக ஆழ்ந்த துக்கம் நிலவி இருந்தது. நாடாளுமன்றத்திலிருந்து நேற்று திரு லீயின் நல்லுடல் 15.4 கி.மீ. தூரத்தைக் கடந்து சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகக் கலாசார மையத்திற்கு செல்லும் இறுதி ஊர்வலப் பாதை முழுக்க காலை யிலிருந்தே சிங்கப்பூரர்கள் திரளாக வந்து வரிசை வரிசையாக நிற்கத் தொடங்கினர்.

திரு லீயின் நல்லுடல் நாடாளு மன்ற நுழைவாயிலைவிட்டு வெளி வரும் தருணத்திற்குத் தயாராக, கடும் மழையையும் பொருட்படுத் தாது குடைகளைப் பிடித்தபடியும் மழை அங்கிகளை (raincoat) அணிந்தும் பொதுமக்கள் நாடாளு மன்றத்தின் எதிரே இருக்கும் ஹை ஸ்திரீட் சென்டரில் திரண்டு இருந்தனர்.

லீ குவான் இயூவுக்கு கண்ணீருடன் புகழ்மாலை சூட்டிய தாயகம்
30/03/2015

தமிழவேல்

சிங்கப்பூரின் பிரதமர் லீ குவான் இயூவின் இறுதிச் சடங்கு நடந்த தேசியப் பல்கலைக்கழக கலாசார மையத்தில் சோகமே நிறைந்திருந் தது. இன்னாள், முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சமய, சமூகத் தலைவர்கள், மாணவர்கள், ராணுவ வீரர்கள், தொழிலாளர்கள், அடித்தள அமைப்புத் தலைவர்கள், இளையோர், முதியோர் ஆகிய பல தரப்பட்ட மக்கள் அழைப்பின் பேரில் வந்திருந்தனர்.

உடல்நிலை சரி­யில்­லாத போதும் மற்றவர் நலனை நினைத்தவர் லீ
29/03/2015

‘உடல்நிலை சரி­யில்­லாத போதும் மற்­ற­வர் நலனை நினைத்­த­வர் திரு லீ’ என்று சிங்கப்­பூர் பொது மருத்­து­வ­மனை­யின் மருத்­து­வர் கழ­கத்­தின் தலைவர் பேரா­சி­ரி­யர் போங் கோக் யோங் திரு லீயை நினை­வு­கூர்ந்தார். திரு லீக்கு பிப்­ர­வரி 5ஆம் தேதி உடல்நிலை சரி­யில்லாமல் போனபோது உடனே மருத்­துவமனைக்­குச் சென்றால் மூத்த மருத்­து­வர்­களை எழுப்ப வேண்டி இருக்­கும் என்று அவர் அங்கு செல்ல மறுத்­தார்.

அனைவரையும் அரவணைத்த ஆளுமை
29/03/2015

சித்திரா துரைசாமி

மார்ச் 23ஆம் தேதி மறக்க முடியாத நாள். சோகம் கலந்த சிங்கப்­பூர் தேசிய கீதத்தை நான் முதன்­முறை­யாக செவி­ம­டுத்­தேன். பெருமை­யு­டன் நிமிர்ந்து நின்று தேசிய கீதத்தைப் பாடினா­லும் இனம் தெரியாத துயரம் மனதைப் பிழிந்தது. கண்ணீர் மல்க தேசிய கீதத்தை முதன்­முறை­யாக நான் பாடி­ய­தும் அன்­று­தான். நவீன சிங்கப்­பூரை தோற்­று­வித்த இந்­நாட்­டின் பெரு­ம­கன் கடை­சி­யாக தன் சுவாச மூச்சை இந்தப் பூங்கா நகரில் கலந்த­தும் அந்­நா­ளில்­தான்.

இந்தியாவின் வளர்ச்சியை உளப்பூர்வமாக விரும்பிய திரு லீ
29/03/2015

ஜவகர்லால் நேரு முதல் மன்மோகன் சிங் வரை பல இந்தியப் பிரதமர்களுக்கும் தனிப் பட்ட முறையில் நன்கு அறிமுக மானவர் திரு லீ குவான் இயூ. பலமுறை இந்தியாவுக்குப் பயணம் செய்துள்ள திரு லீ, தமது ‘மூன்றாம் உலகத்திலிருந்து முதல் உலகத்திற்கு’ என்ற புத்த கத்தில் இந்தியாவைப் பற்றிய தமது பார்வையையும் பதிவு செய்திருக்கிறார்.

Syndicate content