திரைச்செய்தி | த‌மிழ் முர‌சு - Tamil news

திரைச்செய்தி

இளம் நாயகன் அபியின் லட்சியம்
03/06/2015

பொறியியல் மற்றும் எம்.பி.ஏ., படித்துவிட்டு வேலை பார்த்து வந்தாலும் அடிக்கடி சென்னைக்கு வந்து, சினிமா வாய்ப்பும் தேடிவந்துள்ளார் இளம்நாயகன் அபி. எஸ்.எஸ்.குமரன் தயவால் ‘கேரள நாட்டிளம் பெண்களுடனே’ படத்தின் மூலம் கோடம்பாக்கத்தில் கதாநாயகனாக கால்பதித்துவிட்டார் அபி.

நகைச்சுவை நடிகர் என்று அழைத்தால் சந்தானத்திற்குப் பிடிக்கவில்லை
03/06/2015

‘இனிமே இப்படித்தான்’ படம் வெளியீடு காணத் தயாராக உள்ளது. படத்தின் நாயகன் சந்தானம். மனிதர் முகத்தில் துளியும் பதற்றம் இல்லை. 120 படங்களுக்கு மேல் நடித்துவிட்டதால் கிடைத்த அனுபவம் இதற்குக் காரணமாக இருக்கலாம்.

இனி முக்கியமான நகைச்சுவை வேடங்களில் மட்டுமே நடிப்பேன் என்கிறீர்களே?

‘வாலு’ படத்துக்காக சிம்புவுக்கு வாழ்த்து சொன்ன தனுஷ்
03/06/2015

சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள ‘வாலு’ படம் முடிவடைந்து வெளியீட்டிற்கு காத்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இப்படம் சம்பந்தமாக திடீர் பத்திரிகையாளர் சந்திப்புக்கு சிம்பு ஏற்பாடு செய்துள்ளார். இந்தச் செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் சிம்பு வெளியிட்டுள்ளார்.

அமெரிக்காவில் ரகுமான் குறும்படம்
02/06/2015

ஆஸ்கார் மற்றும் கிராமி உள்ளிட்ட விருதுகளைப் பெற்ற ஏ.ஆர்.ரகுமானின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து தயாரிக்கப்பட்டுள்ள குறும்படம் ‘ஜெய் ஹோ’. இப்படம் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் திரையிடப்பட்டது. இத்தகவலை ரகுமானே தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஏமியின் செல்லப் பெயர் ‘பிரியாணி’
02/06/2015

“ஏமி ஜாக்சனுக்கு ஒரு விஷயம்னா பைத்தியம். அது... பிரியாணி! மதிய உணவுக்கு ஸ்பெஷல் பிரியாணி வரும். அரை தட்டு சாப்பிடவே நாங்க திண்டாடிட்டு இருப்போம். ஆனா ஏமி, அவங்க அம்மாவுக்கு வந்த பிரியாணியையும் சேர்த்து காலி பண்ணுவாங்க. ‘பிரியாணியை யார் கூடவும் பகிர்ந்துக்கமாட்டேன். அது என் சென்ட்டிமென்ட்’னு வேற சொல்வாங்க.

மீண்டும் நெருங்கும் காதல் ஜோடி
02/06/2015

‘இதோ, நாளை எங்க திருமணம்’ என்கிற அளவில் படு வேகமாகப் போய்ச் கொண்டிருந்த திரையுலகக் காதல் ஜோடி என்றால் அது சித்தார்த்-சமந்தா ஜோடிதான். “நடுவுல நிறைய தடைகள் வருதேப்பா, பேசாம காளஹஸ்தியில் போய் ஒரு நாக தோஷ நிவர்த்தி பண்ணிடலாமா?” என்று இருவருமே குடும்பத்தோடு கிளம்பிப்போனதையெல்லாம் நாடறியும்.

டாப்சியின் காதல் அனுபவம்
01/06/2015

தமிழ்ச் சினிமாவில் உள்ள நடிகைகளில் அபூர்வமாக கணினி அறிவியல் வரைக்கும் படித்தவர் டாப்சி. மென் பொருள் துறையில் சில ஆண்டுகள் வேலை பார்த்தவர். தமிழ், இந்தி, தெலுங்கு என மாறிமாறி ஓடிக் கொண்டிருக்கிறார். இதுவரை 5 தமிழ்ப் படங்களில் மட்டுமே நடித்துள்ளீர்கள். ஏன்?

பிரச்சினைகளைக் கடந்து வளர்ந்து வருகிறது -‘இது நம்ம ஆளு’
01/06/2015

சிம்பு, நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய படம் ‘இது நம்ம ஆளு’. பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தை சிம்பு தனது சொந்த நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார். ஆண்ட்ரியா, சந்தானம், சூரி, ஜெயப்பிரகாஷ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள்.

சாய்பாபா வேடத்தில் ‘அபூர்வ மகான்’ தலைவாசல் விஜய்
31/05/2015

குணச்சித்திரம், வில்லன் வேடம் உள்ளிட்ட பல வேடங்களில் நடித்து வந்த தலைவாசல் விஜய், தற்போது சாய்பாபாவாக வேட மேற்று ‘அபூர்வ மகான்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை கே.ஆர்.மணிமுத்து இயக்கி வருகிறார்.

திருமணம் நின்றதால் கவலையில்லை என்கிறார் திரிஷா
31/05/2015

நடிகை திரிஷாவுக்கும் பட அதிபரும் தொழில் அதிபருமான வருண் மணியனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. கடந்த ஜனவரி மாதம் 24-ஆம் தேதி நிச்சயதார்த்தம் நடந் தது.

Syndicate content