அர்த்தமுள்ள தீபாவளித் திருநாள்

தீபாவளிக்கு இன்னும் ஒருநாள் மட் டுமே உள்ள நிலையில் பண்டிகைக்கு இந்துக்கள் முழுமூச்சுடன் தயாராகி வருகின்றனர். இவ்வேளையில், தங்களுக்கு தீபாவளி தரும் அர்த்தங்கள் குறித்து இளையர்கள் சிலர் தங் களது கருத்துகளைத் தமிழ் முரசிடம் பகிர்ந்துகொண்டனர். சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்த தம்மைப் போன்ற இளையர்களுக்குத் தீபாவளி என்றாலே மட்டற்ற மகிழ்ச்சி என்ற சுதர்‌ஷினி நந்தகுமார், 18, தீபாவளி என்றாலே முதலில் நினை வுக்கு வருவது சிராங்கூன் சாலையின் சிறப்பான அலங்காரங்கள்தான் என்று சொன்னார்.

"காலையில் எழுந்ததும் எண் ணெய் தேய்த்துக் குளிப்பது முதல், புத்தாடைகள் அணிந்து குடும்பத்தா ருடன் கோயிலுக்குச் சென்று இறை வழிபாடு செய்வது, மாலையில் பட்டாசு வெடிப்பது என்ற வழக்கமான கடமை கள், கொண்டாட்டங்கள் மட்டுமல்ல நான் அறிந்த தீபாவளி. சிங்கப்பூரில் வசித்து வரும் பல இன, சமய மக்க ளுடன் ஒன்றிணைந்து இப்பண்டிகை யின் தனிச்சிறப்புகளை உணர்ந்து, ரசிப்பதும் நமது கொண்டாட்டங்களின் சிறப்பம்சமாகும்," என்றார் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் உயிர் மருத்துவப் பொறியியல் துறையில் இரண்டாமாண்டு பயிலும் சுதர்‌ஷினி. இந்தியாவில் கொண்டாடப்படும் அளவிற்கு விமரிசையாக சிங்கப்பூரில் தீபாவளி கொண்டாடப்படவில்லை என்றாலும் இங்கும் கொண்டாட்டங் களுக்குப் பஞ்சமில்லை என்பதுதான் உண்மை என்றார் அவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!