மேளதாளம், குதிரை சவாரியுடன் ‘ஐபோன் 10’ வாங்கிய இளைஞர்

மும்பையைச் சேர்ந்த ஆப்பிள் கைபேசி பிரியர் ஒருவர் தான் விரும்பும் 'ஐபோன் 10' வாங்க குதிரை மீது சவாரி செய்து, மேள தாளத்துடன் ஆரவாரமாய் கடைக் குச் சென்று வாங்கினார். குதிரை மீது அமர்ந்து, கையில் 'ஐ லவ் ஐபோன் 10' என்ற பதா கையைப் பிடித்தபடி, இசைக்குழு வினர் அதிரும் மேளதாள ஒலியுடன் தன்னைக் கடை வரை பின் தொடர்ந்துவர முன்னதாகவே 'ஆர்டர்' செய்து வைத்திருந்த 'ஐபோன் 10'ஐ வாங்கிச் சென் றுள்ளார் இளைஞர் ஒருவர். 'ஐபோன் 10' வாங்க மேள தாளத்துடன் குதிரை மீது இளை ஞர் சவாரி சென்ற காணொளி சமூக வலைத்தளங்களில் வேக மாகப் பரவி வருகிறது.

ஊடகத் தகவல்களின்படி மும்பையின் நவ்பாடா மாவட்டம், தானே பகுதியைச் சேர்ந்த பலிவால் என்பவர் தனது 'ஐபோன் 10'ஐ தானேயின் ஹரிநிவாஸ் பகுதியில் கடந்த வெள்ளியன்று மாலை குதிரை மீது அமர்ந்தபடியே கடை உரிமையாளரிடம் இருந்து பெற்றுக்கொண்டார். ஒவ்வொரு முறை புதிய ஐபோன்களின் விற்பனை துவங் கும்போதும் ஆப்பிள் பிரியர்களின் அதீத ஆர்வம் செய்திகளாக உலா வருவது வாடிக்கை. விற்பனைக்கு ஓரிரு நாட்கள் முன்பே ஆப்பிள் கடையின் வாயிலில் படுத்திருந்து, கால்கடுக்க நீண்டநேரம் காத்தி ருந்து முதலாவதாக ஐபோன் வாங்கிய சம்பவங்கள் அரங்கே றின. அதுபோல மும்பையின் தானே மாவட்டத்தில் 'ஐபோன் 10' பெற வெள்ளியன்று மாலை 6.30 மணிக்கு சென்ற பலிவால், கடையினுள் செல்லாமல் குதிரையில் அமர்ந்தபடியே புத்தம் புதிய 'ஐபோன் 10'ஐ கடை உரிமையாள ரிடம் இருந்து வாங்கிச் சென் றுள்ளார். இந்தியாவில் ஆப்பிள் 'ஐபோன் 10' மாடல் 64 ஜிபி ரூ.89,000 மற்றும் மாடல் 256 ஜிபி ரூ.102,000 எனவும் விலை நிர்ணயம் செய்யப் பட்டு விற்கப்பட்டு வருகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!