சுயதொழில் செய்வோரின் கவலைகள்: கருத்து சேகரிப்பு

எதிர்கால பொருளியலில் சுய தொழில் செய்வோர் எவ்வாறான பிரச்சினைகளை எதிர்நோக்குவார் கள் என்பது பற்றி ஆய்வு செய்வ தற்கு முத்தரப்புப் பணிக்குழு ஒன்று இந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கப்பட்டது. முக்கிய பிரச்சி னைகள் என்று எவற்றை குறிப்பிடு கிறார்கள் என்பது பற்றி பொதுமக் களிடம் கருத்துகளைத் திரட்டு கிறது அந்தப் பணிக்குழு.

மனிதவள அமைச்சு, தேசிய தொழிற்சங்க காங்கிரஸ், சிங்கப் பூர் தேசிய முதலாளிகள் சம்மேள னம் ஆகிய அமைப்புகளிலிருந்து பிரதிநிதிகளைக் கொண்டு அமைக்கப்பட்ட இந்தப் பணிக்குழு, சுயதொழில் செய்வோருடன் நடை பெற்ற பல கலந்துரையாடல்களின் மூலம் பற்பல அக்கறைக்குரிய தக வல்கள் பெறப்பட்டதாகக் கூறியது. தாமதமாக ஊதியம் பெறுவது, சில வேளைகளில் ஊதியமே கிடைக்காதது அல்லது முழுமை யாகப் பெறாதது, வேலைவாய்ப்பு அனுகூலங்கள் பெறமுடியாதது, போதுமான வேலை கிடைக்காத சாத்தியம், நிலையற்ற வருமானம் ஆகியவை சுயதொழில் செய்வோர் சுட்டிக்காட்டிய கவலைகளில் சில. பொதுமக்கள் தங்கள் கருத்து களை mom_consultations@ mom.gov.sg என்ற மின்னஞ்சல் முகவரிக்கு டிசம்பர் 22ஆம் தேதி மாலை 6 மணிக்குள் அனுப்பலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!