சீனாவில் அதிபர் டிரம்ப் பெய்ஜிங்: அமெரிக்க அதிபர்

டோனல்ட் டிரம்ப் தென்கொரியப் பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று சீனா சென்றுசேர்ந்தார். பெய்ஜிங்கில் தரை இறங்கிய திரு டிரம்ப்பிற்கு சீன அதிபர் ஸி ஜின்பிங் சிறப்பு வரவேற்பு அளித்தார். திரு ஸி ஜின்பிங் மற்றும் சீனத் தலைமகள் பெங் லியுவானு டன் திரு டிரம்ப்பும் அமெரிக்கத் தலைமகள் மெலானியாவும் பெய்ஜிங்கில் உள்ள ஃபார்பிடன் சிட்டிக்கு நேற்று சென்றிருந்தனர். அந்நகரில் உள்ள பழமை வாய்ந்த அறிவியல் தொழிற் கூடத்தை அவர்கள் சுற்றிப் பார்த்தனர். திரு டிரம்ப்பும் சீன அதிபரும் பின்னர் பல்வேறு அம்சங்கள் குறித்து பேச்சு நடத்தவுள்ளனர். முன்னதாக தென்கொரிய நாடாளுமன்றத்தில் உரையாற்றிய திரு டிரம்ப், வடகொரியாவுடனான உறவை சீனா முறித்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார். திரு டிரம்ப் 12 நாள் ஆசியப் பயணத்தின் மூன்றாவது கட்டமாக சீனா வந்துள்ளார். சீனா புறப்படுவதற்கு முன்பு திரு டிரம்ப், சீன அதிபர் ஸி ஜின்பிங்கை புகழ்ந்து பேசினார். திரு ஸி ஜின்பிங்கை சந்தித்துப் பேசுவதை தாம் ஆவலுடன் எதிர்பார்ப்பதாக திரு டிரம்ப் கூறினார். சீன அதிபரை திரு டிரம்ப் இவ்வாறு புகழ்ந்து பேசியிருப்பது அவருடன் சிக்க லான விஷயங்கள் குறித்து பேசு வதற்கு முன்பு அவரை சமாதானப்படுத்த திரு திரு டிரம்ப் முயற்சி செய்வதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

சீனா வந்துள்ள அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்பும் அமெரிக்கத் தலைமகள் மெலானியாவும் சீன அதிபர் ஸி ஜின்பிங்குடனும் சீனத் தலைமகள் பெங் லியுவானுடனும் பெய்ஜிங்கில் உள்ள ஃபார்பிடன் சிட்டிக்கு வருகை அளித்தனர். படம்: ராய்ட்டர்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!