‘மான்செஸ்டர் சிட்டி நான்கு விருதுகள் வெல்ல வாய்ப்பு’

பிரிமியர் லீக், எஃப்ஏ கிண்ணம், லீக் கிண்ணம், சாம்பியன்ஸ் லீக் என நான்கு போட்டிகளிலும் வெல்லும் வாய்ப்பு மான்செஸ்டர் சிட்டி குழுவுக்கு இருப்பதாக அந்தக் குழுவின் மத்திய திடல் வீரரான ஃபில் ஃபோடன் (படம்) கூறி உள்ளார்.
நேற்று அதிகாலை நடைபெற்ற எஃப்ஏ கிண்ணப் போட்டி ஒன்றில் நியூபோர்ட் குழுவை 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றபின் அவர் இவ்வாறு நம்பிக் கையுடன் கூறினார்.
நேற்றைய போட்டி யில் வென்றதன் பயனாக மான்செஸ் டர் சிட்டி குழு எஃப்ஏ கிண்ணப்போட்டியின் காலி றுதிக்குத் தகுதி பெற்றுள்ளது.
இந்நிலையில் பெப் கார்டி யோலாவின் நிர்வாகத்தில் இயங் கும் மான்செஸ்டர் சிட்டி குழு, பிரிமியர் லீக் தரவரிசையில் முதலிடம் வகிக்கிறது. அத்துடன், அது சாம்பியன்ஸ் லீக்கில் அடுத்த புதன்கிழமை ஷால்க குழுவுடன் மோதுவதுடன், லீக் கிண்ண இறுதிப் போட்டியில் அடுத்த ஞாயிற்றுக்கிழமை செல்சியை எதிர்கொள்கிறது.
"எல்லாமே எங்களுக்குச் சாதக மாக இருக்கிறது. ஆனால், போகப் போக கடினமாக இருக் கும்" என்று கூறுகிறார் ஃபில் ஃபோடன்.
ஒரே காற்பந்து பருவத்தில் எந்தவொரு இங்கிலாந்துக் காற் பந்துக் குழுவும் நான்கு விருதுகளையும் இதுவரை வென்ற தில்லை. மான்செஸ்டர் யுனைடெட் மட்டும் 1999ஆம் ஆண்டு காற்பந்துப் பருவத்தில் மூன்று விருது களை வென்றது குறிப்பிடத் தக்கது.
"மான்செஸ்டர் சிட்டியில் பெரிய அளவிலான குழு உள் ளது. இதிலுள்ள ஒவ்வொருவரும் தாங்கள் குழுவில் விளையாட சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் விளையாடு கின்றனர்.
"இதனால் பெப் கார்டியோலா அனைவரும் விளையாடும் வண்ணம் வீரர்களை மாற்றி மாற்றி விளையாடு கிறார்," என்று பிபிசி ஸ்போர்ட் ஒளி வழிக்கு வழங்கிய பேட்டியில் ஃபில் தெரிவித்துள்ளார்.
ஆனால் நேற்று நியூ போர்ட் குழுவை வெற்றிகொண்ட பின்னர் பேசிய கார்டியோலா, தமது குழு அனைத்து விருதுகளையும் வெல் லக்கூடும் என்ற பேச்சுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வில்லை. இதில் அவர் மான்செஸ்டர் யுனைடெட் குழு சென்ற அண்மையில் பாரிஸ் செயிண்ட் ஜெர்மேன் குழுவிடம் தோற்றதை சுட்டினார். அந்த ஆட்டத்தில் அதுவரை போட்டிகளில் வெற்றி பெற்றுவந்த யுனைடெட் குழு திடீரென சறுக்கி தோல்வியைச் சந் தித்தது. எதிர்வரும் மே, ஜூன் மாதங்களில் நிலைமை எப்படியிருக்கிறது என்று பார்ப்போம்.
ஆனால், பிப்ரவரி மாதத்தில் எல்லாப் போட்டிகளிலும் இடம்பெற்றிருக்க வேண்டியது முக்கியமானது," என்று ஃபில் ஃபோடன் பிபிசி பேட்டியில் விளக்கினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!