பிரான்ஸ் பக்கம் மொரின்யோவின் பார்வை

லீல்: பிரெஞ்சுக் காற்பந்துக் குழு ஒன்றுக்குப் பயிற்றுவிப்பாளராக தம்மைப் பார்க்க முடிவதாக மான்செஸ்டர் யுனைடெட் குழு வின் முன்னாள் நிர்வாகி ஜோசே மொரின்யோ தெரிவித்துள்ளார்.
பிரெஞ்சு லீக் குழுக்களான லீல், மாண்ட்பிளியர் நேற்று முன் தினம் பொருதிய ஆட்டத்தைப் பார்க்க மொரின்யோ சென்றார். அந்த ஆட்டம் கோல் எதுவுமின்றி சமநிலையில் முடிந்தது.
கடந்த டிசம்பரில் யுனைடெட் டின் நிர்வாகி பதவியிலிருந்து மொரின்யோ நீக்கப்பட்டார். பதவிநீக்கத்திற்காக மொரின் யோவிற்கு யுனைடெட் 19.6 மில் லியன் பவுண்ட் (S$25 மில்லியன்) இழப்பீடு வழங்கியது.
இந்நிலையில், பயிற்றுவிப் பாளர் பணியை நாட விரும்பும் மொரின்யோவின் கவனம் பிரான்ஸ் பக்கம் திரும்பியுள்ளது.
"ஒரு நாள் பிரெஞ்சு காற்பந் துக் குழு ஒன்றுக்கு பயிற்று விப்பாளராக இருப்பதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடி கிறது.
"நான்கு வெவ்வேறு நாடு களில் நிர்வாகியாகப் பொறுப்பு வகித்த அனுபவம் எனக்கு உண்டு. பிற நாட்டு கலாசாரங் களைக் கற்றுக்கொள்வதில் எனக்கு எப்போதுமே ஆர்வம் உண்டு," என்றார் மொரின்யோ.
இந்நிலையில், மொரின்யோ முன்னதாக நிர்வகித்த ரியால் மட்ரிட் குழுவுக்கு அவர் திரும்பக் கூடும் என்ற பேச்சும் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!