தீ விபத்து தொடர்பான பாதுகாப்பு ஒத்திகை


Wednesday, November 20th, 2013

தீ விபத்து தொடர்பான பாதுகாப்பு ஒத்திகை

சென்னையில் உள்ள பெரிய கட்டடங்களில் திடீர் தீ விபத்துகள் ஏற்படும்போது எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது தொடர்பில் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் சார்பில் அவ்வப்போது பொது மக்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

நேற்று முன்தினம் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் அமைந்துள்ள கட்டடத்தில் இத்தகைய பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது. அப்போது அலுவலகத்திற்குள் மூளும் தீயை அணைப்பது குறித்து பெண்களுக்கு தீயணைப்பு வீரர்கள் செய்முறை பயிற்சி அளித்தனர். படம்: சதீஷ்