தலைமுறைகள்


Wednesday, December 4th, 2013

தலைமுறைகள்

‘தலைமுறைகள்’ படப்பிடிப்பில் பாலு மகேந்திரா, ரம்யா, சசிகுமார்.

“சசி, நான் உன்னைப் பார்க்க வரணும்,” - இது பாலு மகேந்திரா. “எங்க இருக்கீங்க சார், நானே வர்றேன்,” - இது இயக்குநர் சசி குமார். “இல்லேப்பா நானே வர்றேன். ஏன்னா தேவை எனக்குத்தான்.” -சொல்லிவிட்டு அடுத்த சில நிமிடங்களில் சசிகுமார் அலுவல கத்தில் நிற்கிறார் பாலு மகேந்திரா. “நான் ஒரு கதை சொல்றேன்.

பிடிச்சிருந்தா அந்தப் படத்தை நீ தயாரிக்கணும்,” என்கிறார் பாலு மகேந்திரா. பாதி கதை முடிவதற்குள் “இந்த படத்தை நான் தயாரிக்கிறேன்,” என்கிறார் சசி. அந்த படம்தான் ‘தலைமுறைகள்’. எழுபதைத் தாண்டிவிட்டாலும் அதே ஆர்வமும், அதைத் தாண்டிய உழைப்பும் பாலு மகேந்திராவிடம் இருப்பது வியப்போ வியப்பு. “ஈரானியப் படத்தையெல்லாம் பார்த்துவிட்டு வாயைப் பிளந்து எத்தனை நாள்தான் ரசிப்பது? நமது படங்களைப் பார்த்து அவங்க வாயைப் பிளக்க வேண்டாமா?” - இதுதான் பாலு மகேந்திராவின் கேள்வி. அதற்குரிய படம்தான் ‘தலைமுறைகள்’. “ஒவ்வொரு நாளும் படப் பிடிப்புக்கு வந்ததும் சார் கேட்கிற கேள்வி இதுதான்.

‘ஏம்மா மேக்கப் போடலையே?’. அவருக்கு மேக்கப் போட்டா பிடிக்காது. இந்த படத் தில் நடிச்சதை நான் வாழ்நாள் பாக்கியமா நினைக்கிறேன்,” என்கிறார் படத்தின் நாயகி ரம்யா சங்கர். தமிழ் கொஞ்சம் கொஞ்சம் தெரியும் பேரனுக்கும் ஆங்கிலம் கொஞ்சம் கொஞ்சம் தெரியும் தாத்தாவுக்கும் நடுவில் நடக்கும் பாசப் பிணைப்புதான் இப்படமாம். ஒரு காட்சியில் சசிகுமாரும் நடித்திருக்கிறார்.

விவரம்: அச்சுப் பிரதியில்