நாய்

டேஜியோன்: கொரியாவில் காணாமல்போன ‘ஜிண்டோ’ ரக நாய் ஒன்று, பல கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து 41 நாள்களுக்குப் பிறகு வீட்டைத் தேடிக் கண்டுபிடித்து திரும்பியிருக்கிறது.
சென்னை: ராட்வைலர் உள்ளிட்ட 23 வகையான நாய் இனங்கள், அவைகளின் கலப்பினங்கள் இறக்குமதி செய்வதற்கும், இனப்பெருக்கம் செய்வதற்கும், வளர்ப்புப் பிராணிகளாக விற்பனை செய்வதற்கும், இவைகளின் எல்லா வகை பயன்பாடுகளும் தடை செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
செல்லப்பிராணிகளுக்காக வீட்டிலிருந்து இயங்கிய சிகை திருத்தும் வர்த்தகம் ஒன்று, அதன் சேவையை நாடியவரது நாயைத் தொலைத்துவிட்டது. அந்த நாய் பின்னர் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தது.
புதுடெல்லி: இந்தியாவில் நாய்க்கடியால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், 23 வகையான நாய் ரகங்களை வீட்டில் வளர்ப்பதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
செல்லப் பிராணிகளை உரிமம் பெற்ற இடங்களில் தங்க வைக்க வேண்டும் என்று விலங்குநல மருத்துவச் சேவை வேண்டுகோள் விடுத்துள்ளது.