உக்ரேன்

கியவ்: உக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலன்ஸ்கியையும் அந்நாட்டு உயரதிகாரிகளையும் கொல்வதற்குச் சதி செய்ததாகக் கூறி, உக்ரேன் பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக ‘ஏஎஃப்பி’ செய்தி தெரிவிக்கிறது.
மாஸ்கோ: ரஷ்யாவின் பெல்கோரோட் பகுதியில் இரண்டு பேருந்துகள் மீது உக்ரேனிய ஆளில்லா வானூர்தி நடத்திய தாக்குலில் அறுவர் கொல்லப்பட்டனர், 35 பேர் காயமடைந்தனர்.
பாரிஸ்: சீன அதிபர் ஸி ஜின்பிங், பிரான்ஸ் சென்றிருக்கிறார்.
கியவ்: ரஷ்ய ஆக்கிரமிப்புப் பகுதியை விட்டு வெளியேறி உக்ரேன் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியை அடைய 98 வயது உக்ரேனிய மூதாட்டி ஒருவர் 10 கிலோமீட்டர் தொலைவை நடந்தே கடந்ததாகக் கூறப்படுகிறது.
கியவ்: மூன்று வட்டாரங்களில் உள்ள முக்கிய எரிசக்தி நிலையங்களை ரஷ்யா தாக்கியிருப்பதாக உக்ரேன் புலம்பியிருக்கிறது.