மசெக

சிங்கப்பூரர்கள் தங்கள் நாட்டின் அரசியல் அமைப்பில் சிறப்பான, அரிதான ஒன்றைக் கொண்டுள்ளனர். மக்கள் தொடர்ந்து மக்கள் செயல் கட்சிக்கு (மசெக) அதிகாரம் கொடுத்துள்ளனர். பதிலுக்கு அந்தக் கட்சி பாதுகாப்பு தொடங்கி வீட்டுவசதி, கல்வி, சுகாதாரம், பொருளியல் வரை அனைத்திலும் தலைசிறந்த முன்னேற்றத்தை வழங்கியுள்ளது என்று பிரதமர் லீ சியன் லூங் கூறினார்.
திரு லீ சியன் லூங், சிங்கப்பூரின் பிரதமராகத் தமது கடைசி முக்கிய அரசியல் உரையை ஆற்றவுள்ளார்.
2020 பொதுத் தேர்தலைத் தொடர்ந்து ஏற்பட்ட இடைவெளிக்குப் பிறகு, எதிர்க்கட்சியான பாட்டாளிக் கட்சியின் தொகுதிகளில் குடியிருப்பாளர்களைச் சந்திக்கும் நிகழ்வுகளை மக்கள் செயல் கட்சியைச் (மசெக) சேர்ந்த அடித்தளத் தலைவர்கள் அதிகரித்துள்ளனர்.
உலகின் மற்ற பகுதிகளுடனான சிங்கப்பூரின் ஈடுபாட்டைக் கையாள, 4ஆம் தலைமுறைத் தலைமைத்துவம் நாட்டை முக்கிய பங்காளிகளுக்கு பொருத்தமானதாக்குவதற்கும் ஆதரவுக் கூட்டணியைத் திரட்டுவதற்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று சிங்கப்பூரர்கள் நம்புகின்றனர்.
சிங்கப்பூரின் சிறந்த அரசாங்கச் சேவை காரணமாக அனுபவமிக்க அல்லது திறமையான அமைச்சர் தேவையில்லை என்ற வாதம் ‘பைத்தியக்காரத்தனமானது’ என்று பிரதமர் லீ சியன் லூங் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 5) தெரிவித்தார்.