தமிழ்

இந்­திய மர­பு­டைமை நிலை­யமும் ஆனந்தா மரபுக்‌கலைகள் கூடமும் (ஆட்டம்) இணைந்து வழங்கும் ‘நம் மரபு’ தொடரின் ஓர் அங்கமாக, கரகாட்ட கலையையும் தவில் கலையையும் சிங்கப்பூரர்களுக்கு அறிமுகப்படுத்துவதற்கு இந்தியாவிலிருந்து கலைமாமணி தேன்மொழியும் கலைச்சுடர்மணி ராஜேந்திரனும் இங்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை ஏப்ரல் 28ஆம் தேதியன்று பிற்பகலில் உட்லண்ட்ஸ் வட்டார நூலக அரங்கில் ‘தமிழ் நேர்காணல் போட்டி’ எனும் தமிழ்மொழி விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
ஞாயிற்றுக்கிழமை ஏப்ரல் 28ஆம் தேதி, மாலை 2 முதல் 6 மணி வரை புக்கிட் பாஞ்சாங் சமூக மன்றம் தமிழ்மொழி விழா நிகழ்ச்சியாக பாடல், மாறுவேடப் போட்டிகளைச் சிறுவர்களுக்காக ஏற்பாடு செய்தது.
மத்தியப் பொது நூலகத்தில் ஏப்ரல் 21ஆம் தேதி பிற்பகல் 2 முதல் 4 மணி வரை, ‘சிங்கப்பூர்ச் சிறுகதை நூற்றாண்டு (1924-2024): ஒரு வரலாற்றுப் பார்வை’ எனும் கலந்துரையாடல் நடைபெற்றது. அதை எழுத்தாளர் சிவானந்தம் வழிநடத்தினார்.
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடனான கலந்துரையாடல், ஏப்ரல் 22ஆம் தேதி இரவு சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர்க் கழகத்தின் ஏற்பாட்டில் தேசிய நூலகத்தின் ஐந்தாம் மாடி ‘பாசிபிலிட்டி’ அறையில் நடைபெற்றது.