பதவியேற்பு

புக்கிட் பாத்தோக் தனித்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான 56 வயது முரளி பிள்ளை, ஜூலை 1ஆம் தேதி முதல் சட்ட, போக்குவரத்து துணை அமைச்சராகிறார்.
துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான லாரன்ஸ் வோங் மே 15ஆம் தேதி சிங்கப்பூரின் நான்காவது பிரதமராகப் பதவி ஏற்கவுள்ளார். இத்தகைய தலைமைத்துவ மாற்றம் நாட்டுக்கும் மக்களுக்கும் முக்கியமான ஒன்று. மேலுமோர் ஒளிமயமான எதிர்காலத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் இளையர்கள் சிலரைச் சந்தித்துப் பேசியது இவ்வார இளையர் முரசு.
பிரதமராக திரு லாரன்ஸ் வோங் பதவி ஏற்றதும் அவரது புதிய அமைச்சரவையில் திரு லீ சியன் லூங் மூத்த அமைச்சராகப் பொறுப்பு வகிப்பார். மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன் அதே பொறுப்பில் தொடர்ந்து சேவையாற்றுவார்.
இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனை, ஜூரோங் சமூக மருத்துவமனைக்கு இணை பேராசிரியர் டேன் யோக் யங் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பொறுப்பேற்கிறார்.
வாஷிங்டன்: அமெரிக்க நாடாளுமன்றத்தின் வெளியுறவுக் குழுத் தலைவர் மைக் மெக்கால், தைவானின் புதிய அதிபராகத் திரு லாய் சிங்-டே பதவியேற்கும் நிகழ்ச்சிக்குத் தாம் செல்லவிருப்பதாகக் கூறியுள்ளார்.