பிரதமர் லீ

பிரதமர் லீ சியன் லூங் தமது பதவி விலகல் கடிதத்தை அதிபர் தர்மன் சண்முகரத்னத்திடம் மே 13ஆம் தேதியன்று சமர்ப்பித்தார். தாமும் தமது அரசாங்கமும் மே 15ல் பதவி விலகுவதாக திரு லீ தமது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
உலகின் முதல் தர நாடுகளில் ஒன்றாக சிங்கப்பூரை மேம்படுத்தி, பொன்விழாக் கொண்டாட வைத்த நாட்டின் மூன்றாவது பிரதமரான லீ சியன் லூங், 20 ஆண்டுகால தலைமைத்துவத்துக்குப் பிறகு திங்களன்று (மே 13) தமது பதவி விலகல் கடிதத்தை முறைப்படி அதிபர் தர்மன் சண்முகரத்னத்திடம் வழங்கினார்.
அன்னையர் தினத்தை முன்னிட்டு ஃபெர்ன்வேல் குடியிருப்புப் பேட்டையில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
ஈராண்டுக்கு ஒருமுறை தேசிய தொடக்கக்கல்லூரி நடத்திவரும் ‘ஃபன்டாசியா’ (Funtasia) தொண்டு கேளிக்கை விழாவை, இவ்வாண்டு மதியிறுக்கம் சங்கத்தின் ஈடன் பள்ளியுடனும் பெரியவர்களுக்கான ஈடன் மையத்துடனும் (Eden Centre for Adults) இணைந்து நடத்தியது.
பிரதமர் லீ சியன் லூங்கின் உடன்பிறந்த சகோதரரான லீ சியன் யாங்கிடம் ஏற்பட்ட மாற்றம் தம்மை மிகவும் வருத்தமடையச் செய்ததாக மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன் தெரிவித்துள்ளார்.