வீடமைப்பு வளர்ச்சிக் கழகம்

புக்கிட் மேரா நகர மையத்தைப் புதுப்பிப்பதற்கு அதன் வடிவமைப்பு தொடர்பில் கட்டடக் கலைஞர்களின் பரிந்துரைகள் வரவேற்கப்படுவதாக வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் (வீவக) தெரிவித்துள்ளது.
மத்திய சேமநிதி (மசேநி) வீட்டு மானியம் ஓராண்டுக்கு முன்னர் அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மேலும் பலர் மறுவிற்பனை வீடுகளை வாங்குவதற்கு அதனைப் பயன்படுத்தியதாக வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் (வீவக) அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
வீடமைப்பு வளர்ச்சிக் கழகக் குடியிருப்புகளில் அலங்காரம் செய்யும்போது, நெருக்கடி நேரப் பாதுகாப்பு, பொது இடங்களை நிரப்பும் தேவையற்ற பொருள்கள் போன்ற அம்சங்களைக் கருத்தில் கொள்ளவேண்டுமென்று வல்லுநர்கள் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறியுள்ளனர்.
சிங்கப்பூரில் சென்ற ஆண்டு (2023), வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) மறுவிற்பனை வீடுகளை வாங்கிய வெகுசிலரே, ‘சிஓவி’ எனப்படும் வீட்டின் மதிப்பீட்டுத் தொகைக்குமேல் ரொக்கம் வழங்கியதாகத் தெரியவந்துள்ளது.
வீடமைப்பு வளர்ச்சிக் கழகக் (வீவக) குடியிருப்புப் பேட்டைகளின் சில பகுதிகள், பொதுப் பயன்பாட்டுக்கு மூடப்படுவது கடுமையான நடவடிக்கையாகத் தோன்றக்கூடும்.