நிர்மலா சீதாராமன்

புதுடெல்லி: நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாடு முழுவதும் லடாக்-மணிப்பூர் போன்ற சூழ்நிலைகள் உருவாகும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவரும் பொருளியல் நிபுணருமான பரகால பிரபாகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்
புதுடெல்லி: தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு தன்னிடம் பணம் இல்லை என இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து பரிசீலிக்குமாறு பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா தன்னிடம் சொன்னதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி: மக்களவையில் திங்கட்கிழமை (பிப்ரவரி 5) நிகழ்வின்போது பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மாநிலங்களுக்கு நிதி பகிர்வில் ஓரவஞ்சனை காட்டப்படுவதாக காங்கிரஸ் மக்களவை குழுத் தலைவர் ஆதிரஞ்சன் சவுத்ரி குற்றம் சாட்டினார்.
புதுடெல்லி: நாடாளுமன்ற வரவுசெலவுத் திட்ட (பட்ஜெட்) கூட்டத்தொடர் புதன்கிழமை தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் அதிபர் திரௌபதி முர்மு உரையாற்றினார்.
புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் இடைக்கால வரவுசெலவுத் திட்டத்தை (பட்ஜெட்) தாக்கல் செய்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சித் திட்டங்களின் மூலம் கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி மக்கள் வறுமையின் பல பரிமாணங்களில் இருந்து விடுதலை பெற உதவியுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.