தமிழகம்: அரசு நிலத்தை ஆக்கிரமித்து 3,168 வழிபாட்டுத் தலங்கள்

தமிழ்நாட்டில் 3,003 கோவில்கள், 131 தேவாலயங்கள், 27 பள்ளி வாசல்கள், மற்ற சமயங்களைச் சேர்ந்த ஏழு ஆலயங்கள் என மொத்தம் 3,168 சமய வழிபாட்டுத் தலங்கள் அரசு நிலத்தை ஆக்கிர மித்துக் கட்டுப்பட்டுள்ளதாக அம் மாநில அரசு தெரிவித்துள்ளது.
தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளரான ராமகிருஷ்ணன், அரசாங்க இடத் தில் கட்டப்பட்டுள்ள விநாயகர் கோவில் ஒன்றை அகற்றக்கோரி 2004ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு கடந்த மாதம் 4ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது, "ஆலயத்தில் உள்ள இறைவனே ஆக்கிரமிப்பில் ஈடு படக்கூடாது. இறைவனின் பெயரைச் சொல்லி இடத்தை ஆக்கிரமித்து விட்டு சட்டத்தை நீர்த்துப்போகச் செய்துவிடக் கூடாது. சமயத்தின் பெயரால் அரசு நிலங்கள் ஆக்கிரமிக்கப் படுவது மக்களின் சமய உணர்வு களைப் பாதிக்கும்," என நீதிபதி சுப்பிரமணியம் தெரிவித்தார்.
நிலம் பறிக்கும் கும்பல்கள் பொது நிலங்களை ஆக்கிரமிக்க வழிபாட்டுத் தலங்களைக் காரண மாகக் காட்டி வருகின்றனர் எனக் குறிப்பிட்ட அவர், அரசாங்க இடங்கள், புறம்போக்கு நிலங்கள், நீர்நிலைகளை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள அனைத்து சமய வழிபாட்டுத் தலங்கள் குறித்த விவரங்களை அறிக்கையாகத் தாக்கல் செய்யுமாறும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.
இந்நிலையில், நேற்று முன் தினம் வழக்கு மீண்டும் விசா ரணைக்கு வந்தபோது நகராட்சி நிர்வாகத் துறையின் துணைச் செயலாளர் எஸ்.ராமநாதன் ஆக் கிரமிப்பு தொடர்பான அறிக்கை யைத் தாக்கல் செய்தார்.
ஆயினும், நீதிமன்றப் பணி முறைப் பட்டியல் மாறிவிட்டதால் இப்போது இந்த வழக்கைத் தாம் விசாரிக்கவில்லை என்றும் எனவே இவ்வழக்கைப் பொருத்த மான வேறொரு நீதிபதியிடம் ஒப்படைக்கும்படி தலைமை நீதி பதிக்குப் பரிந்துரைப்பதாகவும் திரு சுப்பிரமணியம் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!